என் மலர்
நீங்கள் தேடியது "Jaisaradha School"
- பள்ளியின் செயலாளர்,பொருளாளர், முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பள்ளியின் முதல்வர் மணிமலர் யோகாவின் சிறப்புகள் பற்றி எடுத்துக்கூறினார்
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் யோகா என்ற எழுத்தின் வடிவில் சூரியநமஸ்காரத்தின் 12 நிலைகள் மற்றும் சக்ராசனம், ஏகாபாத ஆசனம், உட்கட் ஆசனம் ஆகிய 5 ஆசனங்களை செய்து காட்டினர்.
பள்ளியின் செயலாளர்,பொருளாளர், முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் கலந்து கொண்டு ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது யோகா என்று யோகா தினத்தை பற்றி பேசினார். பள்ளி பொருளாளர் சுருதி இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை அடைய செய்வது யோகா என்று எடுத்துரைத்தார்.
மேலும் பள்ளியின் முதல்வர் மணிமலர் யோகாவின் சிறப்புகள் பற்றியும் யோகாவின் மூலம் நோயின்றி வாழும் முறைகள் பற்றியும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எடுத்துக்கூறினார்.






