search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பறிப்பு"

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.
    • புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த மணிமுத்து மனைவி சரண்யா தேவி(வயது 42) .இவர் நேற்று பிற்பகல் அவினாசி சேவூர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.

    பதறிப்போன அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினர்
    • போலீசார் தீவிர விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பாலாஜி (48), வேலூர் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டாக பணி புரிகிறார். இவர், காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க பைக்கில் சென்றார். தொடர்ந்து, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென செல்போனை பறித்து கொண்டு ஓடினர். அதிர்ச்சி அடைந்த பாலாஜி, துரத்திச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால், தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய் தனர்.

    அதில் செல்போன் பறித்து தப்பிய காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த சிவா (26), சுகுமார் (23) தேவராஜ் (26) என தெரிந்தது, பின்னர் 3 பேரையும் கைதுசெய்து, செல்போனை பறிமுதல் செய் தனர். இதுபோன்று வேறு எங்கா வது கைவரிசை காட்டினரா? என அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் 3 பேர் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டனர்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் செல்போனை பறித்து விட்டு தப்பியோடினர்.

    கோவை, ஜூலை.31-

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன்(43). இவர் காந்திபுரம் கோகலே வீதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மகேந்திரன் கடையில் இருந்தார்

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மகேந்திரனிடம் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டனர்.

    அவர் முகவரி சொல்லிக்கொண்டிருந்த போது ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேந்திரனின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினார்.

    அவர் கொடுக்க மறுத்ததால் செல்போனை பிடுங்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டனை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன்(26), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி விவேக்(25), கோவை செங்காட்டை சேர்ந்த பரணிகுமார்(23) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கி செல்போனை பறித்த மர்ம நபர்கள்
    • இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார்

    திருச்சி

    திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 18). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு நகைக்கடை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் இவரை எதிர்பாராத விதமாக தாக்கி, செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் ஓடத்துறை மேம்பாலம் பகுதியில் சென்று விட்டனர். உடனே பாலமுருகன் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை கல்லால் தாக்கினர்.
    • தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த வாசுதேவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நந்திவாடி கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மாநகர பேருந்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். திருவான்மியூர் பணிமனையில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருவான்மியூரில் உள்ள ஜெயந்தி சிக்னல் அருகில் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் வாசுதேவனிடம் சென்று அவரது செல்போனை கேட்டனர். அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை கல்லால் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் மயங்கிய வாசுதேவனிடமிருந்து செல்போனை 3 பேரும் பறித்துச்சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த வாசுதேவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாசுதேவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச்சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென கத்திமுனையில் அருணிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரை கைது செய்தனர்.

    ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சி, கோகுலம்காலனி பகுதியை சேர்ந்தவர் அருண். உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் காரணைப்புதுச்சேரி கூட்டுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென கத்திமுனையில் அருணிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர். அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துதப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சென்னை, பெசன்ட் நகர் அடுத்த திடீர் நகரைச் சேர்ந்த துரைராஜ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ரெயில் பெட்டி வாசல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
    • பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் பெண்ணிடமிருந்து செல்போன் பறித்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    சென்னையை சேர்ந்த சகோதரிகள் பிரவீனா மற்றும் அவிதா. இவர்களின் மூத்த சகோதரி அரக்கோணம் அடுத்த திருவலங்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

    அவரது பிறந்தநாள் விழாவுக்கு சகோதரிகள் தனது குழந்தைகளுடன் செல்ல முடிவு செய்தனர்.

    சென்னையில் இருந்து பிரவீனா மற்றும் அவிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் நேற்று காலை அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.

    திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ரெயில் பெட்டி வாசல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

    அப்போது பிரவீனா செல்போன் மூலம் பேசிக்கொண்டு இருந்ததை வாலிபர் நோட்டமிட்டார். திருவள்ளூர் நிலையத்தில் நின்ற ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது வாலிபர், பிரவீனா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீனா கூச்சலிட்டார். இருப்பினும் வாலிபரை பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து பிரவீனா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் பெண்ணிடமிருந்து செல்போன் பறித்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஓடும் ரெயிலில் அவ்வப்போது பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்கும் கும்பல் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.

    நடைமேடையில் நடந்து செல்வது போல் சென்று, ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுமக்கள் பயணிக்கும் மின்சார ரெயில்களில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.

    பாதுகாப்பு படையினர் ஓடும் ரெயிலில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார்.
    • ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் இருந்து பயணிகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரெயிலில் பயணம் செய்தார்.

    அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர்.

    ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினை வை இழந்தார்.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெயில் நிலையங்களில் இதுபோன்று நடைபெறும் செல்போன் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கே.கே. நகர் அண்ணா மெயின் ரோட்டில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார்.
    • மர்ம நபர்கள் 2 பேர் திடீரென இளவரசனின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    சென்னை, எம்.ஜி.ஆர் நகர், வள்ளல் பாரி தெருவில் வசித்து வருபவர் இளவரசன். கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை கே.கே. நகர் அண்ணா மெயின் ரோட்டில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென இளவரசனின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான்.
    • அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    போரூர்:

    ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாட்சாயிணி (வயது47). கணவரை இழந்த இவர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவன கேண்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை 8மணி அளவில் அவர், வழக்கம் போல வீட்டில் இருந்து வளசரவாக்கம் பெத்தானியா நகர் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான். இதனால் அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அவர் சாலையில் தவறி கீழே விழுந்தார். இதில் தாட்சாயிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாட்சாயிணியின் நெற்றியில் 6 தையல் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்து தப்பிய கொள்ளையனை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நித்தியநாதன் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .
    • 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஓமிபேர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திய நாதன் (வயது23). இவர் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .

    அப்போது இவரது கிராமத்தின் அருகில் உள்ள கோட்டி குப்பம் சாலையில் 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நித்தியநாதன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை


    மதுரை பேச்சியம்மன் படித்துறை, வியாசராயபுரம் மடம் சந்து பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் (வயது 19). இவர் கோரிபாளையம் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் எல்.என்.பி. அக்ரகாரம் தெருவில் உள்ள அக்கா வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் தெருவில் நந்தகுமாரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். இருள்மறைவான பகுதிக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றான்.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலநாதன், பன்னீர் செல்வம் மற்றும் ஜெகதீசன், சுந்தரம், அன்பழகன், இதயச்சந்திரன்,  கணேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

    அதில் மோட்டார் சைக்கிள் பதிவு எண்கள் கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து செல்லூர் கீழத்தோப்பு மார்கண்டேயன் மகன் வீரபிரபு (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை திலகர் திடல் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் மாரி மகன் கோபி (வயது 20). இவர் மாநகராட்சியில் சுத்திகரிப்பு ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவர் மேல மாரட் வீதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பினார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில் போலீசார் சக்கிமங்கலத்தில் பதுங்கி இருந்த மேலவாசல் ஆறுமுகம் மகன் செல்வம் (வயது 20) என்பவரை கைது செய்தனர்.  இவர் மீது தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் தங்கச்சங்கிலி பறித்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. 

    ×