search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல்"

    • மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-உடுமலையில் பெரியபட்டி கிராமம், தாராபுரத்தில் சின்னமருதூர்,குருணைக்கல் பட்டி கிழக்கு வலசு ஆகிய பகுதிகளில் மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் காற்றும் நீரும் மாசுபடுகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களில் வேலை செய்ய முடிவதில்லை.நீர்நிலைகளில் கரித்துகள்கள் படர்ந்துள்ளதால், பொதுமக்களும், கால்நடை வளர்ப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    விவசாய நிலங்களில் இயங்கிவரும் இந்த ஆலைகளுக்கு, திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் வாயிலாக 3முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீல் உடைத்து சட்டவிரோதமாக ஆலையை இயக்குகின்றனர்.மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதி பெறாமலும், ஊராட்சி கட்டட விதிப்படி உரிய கட்டுமான அனுமதி பெறாமல் விவசாய நிலத்தில் தடை செய்யப்பட்ட தொட்டி கரி சுடும் ஆலை இயக்குகின்றனர்.

    8 ஆலைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவுக்குப் பின்னரும், 3 ஆலைகள் மட்டுமே இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 5 ஆலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

    சட்டவிரோதமாக இயங்கிவரும் தேங்காய் தொட்டி கரி ஆலைகளை உடனடியாக இடித்து அகற்ற மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாடிப்பட்டி கோர்ட்டில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    • உலகசுற்று சூழல்தின விழாவையொட்டி மரக்கன்று நடப்பட்டது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உலகசுற்று சூழல்தின

    விழாவையொட்டி மரக்கன்று நடப்பட்டது. இதில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கலட்சுமி ஆகியோர் வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கோகுல்நாத், ராஜாஜி, விஜயக்குமார், வெள்ளைசாமி, முத்துமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தலைமைஎழுத்தர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டபணிகள்குழு சட்ட தன்னார்வலர்கள் சண்முகவள்ளி, பாலமுருகன், அயல்அரசன், வனிதா, பொன்னையா ஆகியோர் செய்திருந்தனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரம் கட்டங்குடி ஊராட்சி செவல்கண்மாய் மற்றும் காரியாபட்டி வட்டாரம், துலுக்கன்குளம் ஊராட்சி கண்மாயினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையும் இணைந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கண்மாய் ஆழப்படுத்தும் பணியினை கலெக்டர் மேகநகாதரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி னார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது. மக்கள் சார்ந்து இருக்கும் நீர்,காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உரிய ஆக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட முதல மைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் மண், நீர் மற்றும் மழைவளத்தை பெருக்கும் பொருட்டு விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11வட்டாரங்களில் ஒரு நாற்றாங்கால் (நர்சரி) அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு குளத்துப்பட்டி ஊராட்சி செவல்கண்மாய் அருகில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் (நர்சரி)யை தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. மேலும், இந்த நாற்றாங்கால் (நர்சரி)யில் உருவாக்கக்கூடிய கன்றுகள் அனைத்தும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

    கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ்அ னைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிகளில் சிறுபாசன கண்மாய் - 30, ஊரணி - 7 மற்றும் வரத்துக்கால்வாய்-2 என்ற எண்ணிக்கையிலும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் ஊராட்சியில், இயற்கை ஆர்வலர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மியாவாக்கி முறையில் அடர்வன காடுகள் உருவாக்கும் நோக்கத்தில் மரம் நடும் பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யா ணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், செயற்பொறியாளர் சக்திமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெகிழியின் தீமை குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
    • ஆலங்குளத்தில் சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி ஆலங்குளத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ஆலங்குளம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் சுதா தலைமை தாங்கினார். பேரூராட்சி அலுவலகம் முன்பாக தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளில் சென்றது.

    அப்போது சுற்றுச் சூழல் தினம் குறித்தும், நெகிழி உள்ளிட்டவைகளின் தீமை குறித்தும் தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி பேரூராட்சிப் பணியாளர்கள் சென்றனர்.

    துணைத் தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் சாலமன் ராஜா, கணேசன், சின்னத் தங்கம், காங்கிரஸ் நகர தலைவர் (பொறுப்பு) அருணாசலம், பேரூராட்சி உதவியாளர் முகைதீன் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்பதால் அப்போதே, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய 3 மாநிலங்கள் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க விடாமல் விரட்டியடித்து உள்ளனர். #SterliteProtest #Sterlite
    புதுடெல்லி:

    வேதாந்தா தொழில் நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைப்பது என்று 1995-ல் முடிவு செய்தது. இதற்காக பல மாநிலங்களில் ஸ்டெர்லைட் அணுகியது.

    குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் அந்த மாநில மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலை அமைக்கப்படவில்லை.

    அதன் பிறகு தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததால் தூத்துக்குடியில் ஆலை அமைக்கப்பட்டது. 4 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை உருவாக்கப்பட்டது. தாமிர ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி கொடுப்பது என்பது எளிதான வி‌ஷயம் அல்ல.

    ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் தவறான தகவல்களை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கொடுத்து அனுமதி பெற்றுவிட்டதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு கூறி உள்ளது.


    அதாவது இந்த ஆலை அமையும் இடத்தில் 25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்க கூடாது.

    ஆனால், இந்த ஆலையின் அருகிலேயே முன்னாறு கடல் தேசிய பூங்கா உள்ளது. அதை மறைத்து சுற்றுச்சூழல் அமைப்பில் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஆலையில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். அப்படி கலந்தாலோசனை நடத்தாமலேயே ஒப்புதல் பெற்றதாக சுற்றுச்சூழல் அமைப்பில் காட்டி இருக்கிறார்கள்.

    இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என்று அறிவியல் சுற்றுச்சூழல் இயக்கம் கூறி இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல் சுனிதா நாராயணன் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையால் 20 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அதை விரிவாக்கம் செய்ய முயன்றதால் மக்கள் அதை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். அவர்கள் பேராட்டம் நியாயமானது என்று கூறினார்.

    இந்த ஆலை தொடர்பாக கோர்ட்டு அமைத்த ஆய்வு கமிட்டி சோதனையில் பல்வேறு முறைகளில் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வில் இதன் கழிவு பொருட்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ஆர்செனிக் ரசாயனம் அதிக அளவில் இருப்பதும், சல்பர் டைஆக்சைடு வாயுவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெளியிட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. #SterliteProtest #Sterlite
    ×