search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரித்தொட்டி ஆலை"

    • மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-உடுமலையில் பெரியபட்டி கிராமம், தாராபுரத்தில் சின்னமருதூர்,குருணைக்கல் பட்டி கிழக்கு வலசு ஆகிய பகுதிகளில் மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் காற்றும் நீரும் மாசுபடுகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களில் வேலை செய்ய முடிவதில்லை.நீர்நிலைகளில் கரித்துகள்கள் படர்ந்துள்ளதால், பொதுமக்களும், கால்நடை வளர்ப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    விவசாய நிலங்களில் இயங்கிவரும் இந்த ஆலைகளுக்கு, திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் வாயிலாக 3முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீல் உடைத்து சட்டவிரோதமாக ஆலையை இயக்குகின்றனர்.மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதி பெறாமலும், ஊராட்சி கட்டட விதிப்படி உரிய கட்டுமான அனுமதி பெறாமல் விவசாய நிலத்தில் தடை செய்யப்பட்ட தொட்டி கரி சுடும் ஆலை இயக்குகின்றனர்.

    8 ஆலைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவுக்குப் பின்னரும், 3 ஆலைகள் மட்டுமே இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 5 ஆலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

    சட்டவிரோதமாக இயங்கிவரும் தேங்காய் தொட்டி கரி ஆலைகளை உடனடியாக இடித்து அகற்ற மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×