search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரேஷ் ரெய்னா"

    • பாகிஸ்தான் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு
    • ஏலம் விடுபவர் சுரேஷ் ரெய்னா பெயரை தேர்வு செய்யவில்லை

    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை 'சின்ன தல' என சிஎஸ்கே வீரர்கள் செல்லமாக அழைத்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்பினார். இதனால் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் செய்தார். ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றது.

    நேற்று ஏலம் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். இவரது பெயரும் ஏலப்பட்டியலில் இருந்ததால், இந்தியாவில் லங்கா பிரீமியர் லீக்கை பிரபலப்படுத்த இவர் விளையாடுவது ஒரு வாய்ப்பாகஇருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

    ஆனால், ஒவ்வொரு வீரர்களின் பெயர்களையும் ஏலம் விடுபவர் வெளியிட்டு ஏலத்தை ஆரம்பித்தார். ஆனால், சுரேஷ் ரெய்னாவின் பெயரை அவர் வெளியிடவில்லை. சுரேஷ் ரெய்னா பெயர் புறக்கணிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏலம் விடும்நபர் தவறுதலாக சுரேஷ் ரெய்னா பெயரை தெரிவிக்காமல் விட்டாரா? அல்லது சுரேஷ் ரெய்னா ஏலத்தில் இருந்து விலகினாரா? என்பதை சுரேஷ் ரெய்னாவும், லங்கா பிரீமியர் லீக் நிர்வாகமும் வெளிப்படுத்தினால்தான் தெரியவரும்.

    எப்படி இருந்தாலும் லங்கா பிரீமியர் லீக் ஒரு சிறந்த வீரர் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றை தவறவிடுகிறது என்றால் மிகையாகாது.

    • ஜூன் 14-ம் தேதி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது.
    • போட்டிகள் ஜூலை 31-ந் தேதி தொடங்குகிறது.

    லங்கா பிரீமியர் லீக் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஜூன் 14-ம் தேதி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31-ந் தேதி தொடங்குகிறது.

    ரெய்னா, ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து ஒரு சிறந்த வீரராக ஜொலித்தவர். அவர் ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி 5,500 ரன்களை குவித்துள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் உள்நாட்டு போட்டிகளில் உத்தரபிரதேசம் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

    பிசிசிஐயின் விதிகளின்படி, இந்திய வீரர் மற்ற நாடுகளில் உள்ள லீக்குகளில் விளையாட அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும்.

    • சுரேஷ் ரெய்னா பிளே ஆப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் ஆவார்.
    • ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 714 ரன்கள் அடித்திருக்கிறார்.

    சி.எஸ்.கே. அணி குஜராத்துக்கு பதிலடி கொடுத்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது. இதற்கு முன்பு 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. இதில் 4 முறை கோப்பையை வென்றது. 5 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    இதுவரை பங்கேற்ற 14 சீசினில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது தடவையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற சென்னை அணியும், குஜராத் அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சென்னையில் முதல் முறையாக மோதுகின்றன.


    இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு பெயர்போன பேட்ஸ்மேனான சிஎஸ்கே அணியின் சின்ன தல என்று அழைக்கபடும் சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல் முறையாக சென்னை அணி களமிறங்குகிறது.

    இவர் பிளே ஆப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர். இதுவரை ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 714 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் சுரேஷ் ரெய்னா பெற்றிருக்கிறார்.

    ரெய்னா நாக்அவுட் போட்டிகளில் ஏழு முறை அரை சதம் அடித்திருக்கிறார். பிளே ஆப்பில் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இதே போன்று பிளே ஆப் சுற்றில் அதிக பவுண்டரிகள் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைத்திருக்கிறார்.

    இதைப் போன்று ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை ரெய்னா வென்று இருக்கிறார். குவாலிஃபயர், எலிமினேட்டர் இறுதிப் போட்டி என மூன்று போட்டிகளிலும் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்கிறார். ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் ரெய்னா அதிகபட்சமாக 155.35 என ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார்.

    இப்படிப்பட்ட ஒரு வீரர் சென்னை அணியில் தற்போது இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு தான். 

    • இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை என வர்ணனையாளரிடம் டோனி தெரிவித்திருந்தார்.
    • டோனியின் தலைமையின் கீழ் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் அரங்கில் அதிகம் விளையாடியவர் ரெய்னா.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் சீசனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 'டோனியின் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு சார்ந்த திட்டம் என்ன?' என்பது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 'ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் விளையாடுவேன்' என டோனி தன்னிடம் தெரிவித்ததாக ரெய்னா தெரிவித்துள்ளார்.

    அண்மையில் டோனியை சந்தித்த போது அவர் தன்னிடம் இதை பகிர்ந்து கொண்டதாக ரெய்னா தெரிவித்துள்ளார். டோனியின் இந்த வார்த்தைகள் சென்னை அணிக்காக 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முடிவோடு அவர் இயங்கி வருவதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    அண்மையில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என வர்ணனையாளரிடம் டோனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார். அது முதல் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். டோனியின் தலைமையின் கீழ் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் அரங்கில் அதிகம் விளையாடியவர் ரெய்னா.

    • சேப்பாக்கம் மைதானத்தில் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சிஎஸ்கே இன்று விளையாட உள்ளது.
    • சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தோல்வியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    அந்த அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சேப்பாக்கத்தில் விளையாடுவது சென்னை அணிக்கு சாதகமானது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    அதே நேரத்தில் லக்னோ அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கிறது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

    சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலையில் உள்ளார். குஜராத்துக்கு எதிராக அவர் 50 பந்தில் 92 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 9 சிக்சர்கள் அடித்தார். 2021- ம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ருதுராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக விளையாடுகிறார். அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கான்வே, ஜடேஜா, கேப்டன் டோனி, தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்களும் இருக்கி றார்கள. பந்து வீச்சு பலவீன மாகவே காணப்படுகிறது. அதை நிவர்த்தி செய்வது அவசிய மாகிறது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது. இதனால் மொய்ன் அலிக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பந்து வீசவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 56 ஆட்டத்தில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றது. இதனால் இங்கு இருந்து சி.எஸ்.கே. வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாட உள்ளது. அதேபோல சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அந்த 56 போட்டிகளிலும் ரெய்னா விளையாடி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

    • அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
    • இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம்.

    ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதனையொட்டி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாள்தோறும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள்.

    என தெரிவித்துள்ளார்.

    ருதுராஜ் கெய்க்வாட் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் அவர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை பெற்றிருந்தார். அந்த சீசனில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்காக விளாசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர்.
    • 2020-ம் ஆண்டு டோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா 2022 மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார்.

    2020-ம் ஆண்டு டோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அத்துடன் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த பிசிசிஐ, உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் நிர்வாகம், ராஜீவ் சுக்லா மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,605 ரன்களும் எடுத்ததன் மூலம் அவர் தனது சர்வதேச வாழ்க்கையை முடித்தார்.

    நான் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என்று தன்னைப் பற்றிய வதந்திக்கு சுரேஷ் ரெய்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #SureshRaina
    இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

    தற்போது அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரைப் பற்றி வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ரெய்னா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என்பதுதான் அந்த வதந்தி. இதனால் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னாவுக்கு தினந்தோறும் போனில் நண்பர்கள் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடந்த சில நாட்களாக நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக போலியான செய்தி வந்த வண்ணம் உள்ளது. இது என்னைக் காயப்படுத்தியுள்ளது. இது எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.

    இதுபோன்ற செய்திகளை புறக்கணியுங்கள். கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன். ‘யூ டியூப்’  வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×