search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிளே ஆப் சுற்றுக்கு பெயர்போன சின்ன தல.. முதல் முறையாக ரெய்னா இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே
    X

    பிளே ஆப் சுற்றுக்கு பெயர்போன சின்ன தல.. முதல் முறையாக ரெய்னா இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே

    • சுரேஷ் ரெய்னா பிளே ஆப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் ஆவார்.
    • ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 714 ரன்கள் அடித்திருக்கிறார்.

    சி.எஸ்.கே. அணி குஜராத்துக்கு பதிலடி கொடுத்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது. இதற்கு முன்பு 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. இதில் 4 முறை கோப்பையை வென்றது. 5 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    இதுவரை பங்கேற்ற 14 சீசினில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது தடவையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற சென்னை அணியும், குஜராத் அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சென்னையில் முதல் முறையாக மோதுகின்றன.


    இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு பெயர்போன பேட்ஸ்மேனான சிஎஸ்கே அணியின் சின்ன தல என்று அழைக்கபடும் சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல் முறையாக சென்னை அணி களமிறங்குகிறது.

    இவர் பிளே ஆப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர். இதுவரை ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 714 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் சுரேஷ் ரெய்னா பெற்றிருக்கிறார்.

    ரெய்னா நாக்அவுட் போட்டிகளில் ஏழு முறை அரை சதம் அடித்திருக்கிறார். பிளே ஆப்பில் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இதே போன்று பிளே ஆப் சுற்றில் அதிக பவுண்டரிகள் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைத்திருக்கிறார்.

    இதைப் போன்று ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை ரெய்னா வென்று இருக்கிறார். குவாலிஃபயர், எலிமினேட்டர் இறுதிப் போட்டி என மூன்று போட்டிகளிலும் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்கிறார். ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் ரெய்னா அதிகபட்சமாக 155.35 என ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார்.

    இப்படிப்பட்ட ஒரு வீரர் சென்னை அணியில் தற்போது இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு தான்.

    Next Story
    ×