search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லங்கா பிரீமியர் லீக்"

    • 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
    • இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கண்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது.

    அதை தொடர்ந்து ஆடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் யாழ்ப்பாணம் சேசிங் செய்த போது கண்டி அணியை சேர்ந்த நட்சத்திர பவுலர் இசுறு உடானா ஃபீல்டிங் செய்வதற்காக தனது அணி கேப்டன் சொன்ன இடத்தை நோக்கி திரும்பி பார்க்காமல் பின்வாக்கில் நடந்த சென்றார். அப்போது திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு அவரது அருகே சென்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் பின்னோக்கி நடந்து சென்ற அவர் திடீரென்று கிழே பார்க்கும் போது சில அடி தூரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து ஷாக் ஆனார். உறைந்து போய் தலையில் கை வைத்து பின்னர் வாயில் கை வைத்து அப்படியே மைதானத்தில் அமர்ந்தார்.


    இருப்பினும் தாமதிக்காமல் உடனடியாக அங்கிருந்து எழுந்த அவர் பாம்பு அதனுடைய ரூட்டில் விட்டு எந்த தொந்தரவும் செய்யாமல் மீண்டும் பின்னோக்கி நடந்து ஃபீல்டிங் செய்வதற்காக சென்றார். அதைத்தொடர்ந்து மெதுவாக அங்கிருந்து சென்ற பாம்பு மைதானத்திற்கு வெளியே சென்றதால் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
    • இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.

    இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.

    அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.


    இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார். 

    • பாகிஸ்தான் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு
    • ஏலம் விடுபவர் சுரேஷ் ரெய்னா பெயரை தேர்வு செய்யவில்லை

    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை 'சின்ன தல' என சிஎஸ்கே வீரர்கள் செல்லமாக அழைத்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்பினார். இதனால் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் செய்தார். ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றது.

    நேற்று ஏலம் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். இவரது பெயரும் ஏலப்பட்டியலில் இருந்ததால், இந்தியாவில் லங்கா பிரீமியர் லீக்கை பிரபலப்படுத்த இவர் விளையாடுவது ஒரு வாய்ப்பாகஇருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

    ஆனால், ஒவ்வொரு வீரர்களின் பெயர்களையும் ஏலம் விடுபவர் வெளியிட்டு ஏலத்தை ஆரம்பித்தார். ஆனால், சுரேஷ் ரெய்னாவின் பெயரை அவர் வெளியிடவில்லை. சுரேஷ் ரெய்னா பெயர் புறக்கணிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏலம் விடும்நபர் தவறுதலாக சுரேஷ் ரெய்னா பெயரை தெரிவிக்காமல் விட்டாரா? அல்லது சுரேஷ் ரெய்னா ஏலத்தில் இருந்து விலகினாரா? என்பதை சுரேஷ் ரெய்னாவும், லங்கா பிரீமியர் லீக் நிர்வாகமும் வெளிப்படுத்தினால்தான் தெரியவரும்.

    எப்படி இருந்தாலும் லங்கா பிரீமியர் லீக் ஒரு சிறந்த வீரர் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றை தவறவிடுகிறது என்றால் மிகையாகாது.

    • ஜூன் 14-ம் தேதி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது.
    • போட்டிகள் ஜூலை 31-ந் தேதி தொடங்குகிறது.

    லங்கா பிரீமியர் லீக் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஜூன் 14-ம் தேதி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31-ந் தேதி தொடங்குகிறது.

    ரெய்னா, ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து ஒரு சிறந்த வீரராக ஜொலித்தவர். அவர் ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி 5,500 ரன்களை குவித்துள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் உள்நாட்டு போட்டிகளில் உத்தரபிரதேசம் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

    பிசிசிஐயின் விதிகளின்படி, இந்திய வீரர் மற்ற நாடுகளில் உள்ள லீக்குகளில் விளையாட அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும்.

    • முதலில் ஆடிய கொழும்பு அணி 163 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஜாஃப்னா அணி 164 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. சண்டிமால் 49 ரன் எடுத்தார். போபரா 47 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாஃப்னா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். சதீரா சமரவிக்ரமா 44 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஜாஃப்னா அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சதீரா சமரவிக்ரமாவுக்கும் வழங்கப்பட்டது.

    ×