search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள்"

    • தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் ஒரு மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந்தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் கொச்சு வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) கேரளாவின் கொச்சுவேலிக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுண், குழித்துறை, திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

    மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்
    • கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம்.

     திருப்பூர் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது உண்டு. இதற்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் பாலக்காடு வழியாக வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் இன்று வரை இல்லை.

    ஈரோடு சென்று அங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக செல்லும் ரெயில்களில் தான் பயணிக்க வேண்டியுள்ளது என்பதால், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம். வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம் நிலையத்திற்கு கோவையில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் நிலையங்களுக்கு டீகார்டன் எக்ஸ்பிரஸ் தினசரி செல்கிறது. மேற்கண்ட ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்

    • தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் செல்கிறது.
    • சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேசுவரத்திற்கு நாளை இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தென்மாவட்டங்களுக்கு  சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் (வ.எண்.06049) தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06050) நெல்லையில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    அதேபோல, சென்னை சென்டிரல்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06041) நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இந்த ரெயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06042) ராமேசுவரத்தில் இருந்து வருகிற 24-ந் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும். 

    இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு சிறப்பு ரெயில் (வ.எண்.06040) நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 3.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    • ஏற்கனவே 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இருக்கைகள் முன்பதிவின்போது முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முதல் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை வரை, பொதுமக்கள் எளிதான, வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 211 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு புறமும் மொத்தம் 2,561 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தெற்கு ரெயில்வே மட்டும் 11 வழித்தடங்களில் 56 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    ஏற்கனவே மொத்தம் 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரெயில்களில் இருக்கைகள் முன்பதிவின்போது முறைகேடுகளில் ஈடுபடுதல், அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளை பயணிப்பதை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் ரெயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • விமான கட்டணம் போல, காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.
    • வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

    மதுரை:

    தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணம் போல, காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயிலை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அல்லது தட்கல் கட்டணத்தில் இயக்குமாறு பயணிகள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சிறப்பு கட்டண ரெயிலாக இயக்கப்படுகிறது.

    அதன்படி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06305) எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்துக்கு 8.13 மணிக்கு வந்தடைகிறது. விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு இரவு 10.28 மணிக்கு வருகிறது. மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 12-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06036) அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 3.50 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுநாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீசுவரம், கொட்டராக்கரை, குந்த்ரா, கொல்லம், சாஸ்தன்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி, கோட்டயம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    • திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும்.
    • மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.

    செங்கோட்டை:

    நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லை பகுதிக்கு 2 ஜோடி சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

    இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

    மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை செல்லும்.

    இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு மதுரை செல்லும்.

    இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    • பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    நெல்லை:

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு நெல்லைக்கு வரும். இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சென்றது.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம், பரமகுடி, சங்கரன்கோவில், கழுகுமலை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இவற்றில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    ×