search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க  வேண்டுகோள்
    X

    திருப்பூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டுகோள்

    • ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்
    • கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம்.

    திருப்பூர் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது உண்டு. இதற்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் பாலக்காடு வழியாக வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் இன்று வரை இல்லை.

    ஈரோடு சென்று அங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக செல்லும் ரெயில்களில் தான் பயணிக்க வேண்டியுள்ளது என்பதால், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம். வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம் நிலையத்திற்கு கோவையில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் நிலையங்களுக்கு டீகார்டன் எக்ஸ்பிரஸ் தினசரி செல்கிறது. மேற்கண்ட ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்

    Next Story
    ×