search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்: ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது
    X

    சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்: ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது

    • தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் ஒரு மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந்தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் கொச்சு வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) கேரளாவின் கொச்சுவேலிக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுண், குழித்துறை, திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

    மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×