search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு
    X

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு

    • விமான கட்டணம் போல, காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.
    • வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

    மதுரை:

    தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணம் போல, காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயிலை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அல்லது தட்கல் கட்டணத்தில் இயக்குமாறு பயணிகள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சிறப்பு கட்டண ரெயிலாக இயக்கப்படுகிறது.

    அதன்படி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06305) எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்துக்கு 8.13 மணிக்கு வந்தடைகிறது. விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு இரவு 10.28 மணிக்கு வருகிறது. மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 12-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06036) அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 3.50 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுநாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீசுவரம், கொட்டராக்கரை, குந்த்ரா, கொல்லம், சாஸ்தன்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி, கோட்டயம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    Next Story
    ×