search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ"

    • கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதும், அதனை வெளியில் கூறாமல் மறைப்பதும், பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற பின்னரே இதுபற்றிய தகவல் வெளியே தெரிவதுமான சம்பவங்களும் நடந்தது.

    இதில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இது தொடர்பான ஒரு வழக்கில் குற்றவாளி ஒருவர் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கேரள அரசுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்திற்கும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்விபரம் வருமாறு:-

    கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளை அறிந்து கொள்ளவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.

    இதற்கான பாடதிட்டங்களை மாணவிகளின் வயதுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும். இதற்காக நிபுணர் குழு ஒன்றை 2 மாதங்களில் உருவாக்க வேண்டும்.

    பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

    • ப்ளஸ் 2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி.
    • இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில், 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.
    • கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் முடிவுக்காக காத்து இருந்தனர்.

    ஆனால் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஆனது. இதனால் மாணவ-மாணவிகள் பலர் கல்லூரியில் சேருவதில் சிரமம் ஏற்பட்டது.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்ததால் தங்களுக்கு இடங்கள் கிடைக்குமா? என்ற பதட்டத்தில் இருந்தனர்.

    ஆனால் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் வரையில் மாணவர் சேர்க்கையை முடிக்கக்கூடாது என அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. www.cbse.nic.in, cbse.gov.in, DigiLocker ஆகிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

    இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.25 சதவீதமும், மாணவிகள் 93 சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முடிவுகளை இணையதளத்திலும், பள்ளியிலும் நேரில் சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென வெளியானதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் உற்சாகம் அடைந்தனர்.

    கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஆன்லைன் வழியாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தனர்.

    தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உயர் கல்வியில் சேருவதற்கான அவகாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27-ந்தேதி வரை பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பதட்டம் அடைய தேவையில்லை என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    `உயர்கல்வியில் சேர முடியாத நிலைமையை எடுத்துக் கூறியதை தொடர்ந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    பிளஸ்-2 முடிவை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
    • கலை அறிவியல் கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு முடிந்து வருகிறது.

    சென்னை:

    மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இந்த மாதம் தொடக்கத்தில் முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    பின்னர் அவை தள்ளிப்போனது. தேர்வு முடிவு தாமதம் ஆவதால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். உயர் படிப்புகளில் சேருவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    கலை அறிவியல் கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு முடிந்து வருகிறது. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.சி.ஜி.) அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

    சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆகி வருகிறது. தேர்வு முடிவு வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் உயர் கல்வியில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முன்னதாக முடிக்க கூடாது. உரிய அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு.
    • சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும்.

    சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

      சென்னை:

      நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

      குறிப்பாக பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தேர்வு முடிவு வந்தால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

      சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. பிறகு ஜூலை 10-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிக்குள் வெளியிடும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இறுதியில் ஜூலை 10-ந்தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டது.

      இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. விடைத்தாள்கள் திருத்தம் பணியில் எதிர்பாராத விதமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு விட்டாலும் மறு ஆய்வு பணிகள் இன்னும் முடியவில்லை. அந்த பணிகள் முடிவதற்கு இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

      இதற்கிடையே சில மாநிலங்களில் இருந்து விடைத்தாள்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சி.பி.எஸ்.இ. விடைத்தாள்களை பெறுவதில் தொடர்ந்து தாமதம் எழுந்தது.

      ஹெலிகாப்டர்கள் மூலம் விடைத்தாள்களை பெற்று ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. எனவே சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் 2 வாரங்கள் தாமதம் ஏற்படலாம் என்று மத்திய அரசு கல்வித்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

      • சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இடங்களை நிரப்ப முடியும்.
      • சி.பி.எஸ். இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

      சென்னை:

      தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானது.

      தேர்வு முடிவு வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மாணவர்கள் தற்போது என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரிகளில் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்க விண்ணப்பித்து வருகிறார்கள்.

      அதேநேரத்தில் சி.பி.எஸ். இ.தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இடங்களை நிரப்ப முடியும்.

      எனவே சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளுக்காக என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகள் காத்திருக்கின்றன. அதேநேரத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பம் செய்து தங்களுக்கு பிடித்த படிப்புகள் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள்.

      இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 10-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

      அதேநேரத்தில் சி.பி.எஸ். இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

      சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் அடையும். மேலும் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்காக அந்நாட்டு கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை தொடங்கும்.

      சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளின் வீட்டிற்கு சென்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா இன்று வாழ்த்துகள் தெரிவித்தனர். #ManishSisodia #ArvindKejriwal
      புதுடெல்லி:

      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

      பாரதி ராகவ்

      இந்த தேர்வில் டெல்லியில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.19 சதவீதமும், 84.93 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்ற ஆண்டை விட டெல்லி தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் அறிவியல் பாடத்தில் 97 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். கவுசிக் மனிதநேயம் துறையில் 95.6 சதவீதமும் பெற்றுள்ளான். பாரதி ராகவ் மற்றும் பிரகாஷ் வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

      சித்ரா கவுசிக்

      இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகிய இருவரும் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துகள் தெரிவித்தனர். தொழிற்கல்வியில் முதலிடம் பிடித்த ஷாக்நாஸை சந்தித்தனர்.

       பிரின்ஸ் குமார்

      அதன்பின் செய்தியார்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 'கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கல்விக்காக பட்ஜெட் 5 ஆயிரம் ரூபாய் கோடியிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

      இது முதலீடு செய்வது. செலவு செய்வது அல்ல. நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்கிறோம். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம். நாட்டின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்கிறோம். அதற்கான முடிவுகள் இப்போது கிடைத்துள்ளது' என கூறினார். #ManishSisodia #ArvindKejriwal

      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #cbse #chennaihighcourt
      சென்னை:

      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது.



      இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் எம்.புருஷோத்தமன் என்ற வக்கீல் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

      ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சின்ன குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம், ‘அசைன்மெண்ட்’ போன்றவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ள.

      தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் சுமையாக புத்த கங்களை சுமந்து செல்கின்றனர். அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத் தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே நடத்த வேண்டுமென உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

      இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி., சி.பி.எஸ்,இ., ஆகியவை பதில் மனுக்களை தாக்கல் செய்தன. என்.சி.இ.ஆர்.டி. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘குழந்தைகள் மத்தியில் எவ்வித கல்வி பாகுபாடும் பார்க்கக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி எந்தவொரு மன அழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளோம்.

      கல்வி தரத்தை மேம்படுத்த தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நாங்களே பாடப்புத்ததங்களையும் வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் போதிக்கவேண்டும்?. எவ்வளவு நேரம் அதுவாக படிக்க வேண்டும்? என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டமே உருவாக்கப்படுகிறது.

      அதன்படி ஆரம்பக்கல்வியில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்தில் 2 மணிநேரம் மட்டுமே வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம் வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் அளிக்கப்படவேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு மொழி, கணிதம் என 2 பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழி, சூழ்நிலையியல், கணிதம் என 3 பாடங்களை மட்டுமே போதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

      பள்ளிகளில் விநியோகம் செய்யப்படும் புத்தகங்களைத்தான் வாங்க வேண்டுமென மாணவர்  களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது.

      இது தொடர்பாக பெற்றோரும் பள்ளிநிர்வாகத்துடன் பேசவேண்டும். அதே போல எல்லா பாடத்தையும் ஒரேநாளில் போதிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான அறிவை போதிக்கும் இடமாகவே பள்ளிகள் திகழ வேண்டும்.

      தரமான கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக் கூடாது என்பதை மட்டுமே தாரகமந்திரமாக வைத்து என்.சி.இ.ஆர்.டி. செயல்பட்டு வருகிறது. அதேபோல இபாத்சாலா என்ற மின்னணு வடிவிலான புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இது கைபேசி செயலி வாயிலாகவும் பெற முடியும் என்று கூறிருந்தார்.

      இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்,கிருபாகரன், கோடை விடுமுறையான இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது-

      சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டு முதல், என்.சி. இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள புத்தகங்களை மட்டும் வாங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக் கூடாது. அந்த புத்தகங்களை பயன்படுத்தவும் கூடாது.

      இதுமட்டுமல்ல 1 மற்றும் 2-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. இந்த மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். தனியார் நிறுவன புத்தகங்களை வாங்கி வேறு எந்த பாடங்களையும் நடத்தக்கூடாது. 3 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் படிப்புகளை நடத்தலாம்.

      இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால், அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து, அந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பள்ளிகளை அடையாளம் காண தனியாக பறக்கும்படை ஒன்று மத்திய அரசு அமைக்க வேண்டும்.

      தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களை வாங்கி, அதை தினமும் சுமக்க முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர். அந்த குழந்தைகள் ஒன்றும் பளு தூக்கும் வீரர்கள் இல்லை என்பதை தனியார் பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

      இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #cbse #chennaihighcourt

      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #CBSEresults
      புதுடெல்லி:

      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10 வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5 ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவியர் எழுதினர்.

      இந்த ஆண்டு கேள்வித்தாள் லீக் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மறுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.


      இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு முடிவுகள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். அதை தவிர பல இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBSEresults
      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார். #CBSEresults
      புதுடெல்லி:

      மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12 வகுப்பு தேர்வு எழுதினர்.

      12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதனால் மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு வினாத்தாள்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தேர்வு நடைபெற்று முடிந்தது.

      இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார். மாணவ-மாணவியர் கூகுளில் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும், சி.பி.எஸ்.இ.-யின் இணையதளங்களிலும் வெளியிடப்படும்.

      10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. #CBSEresults

      ×