search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 10-ந் தேதி வெளியாகிறது?
    X

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 10-ந் தேதி வெளியாகிறது?

    • சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இடங்களை நிரப்ப முடியும்.
    • சி.பி.எஸ். இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானது.

    தேர்வு முடிவு வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மாணவர்கள் தற்போது என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரிகளில் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்க விண்ணப்பித்து வருகிறார்கள்.

    அதேநேரத்தில் சி.பி.எஸ். இ.தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இடங்களை நிரப்ப முடியும்.

    எனவே சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளுக்காக என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகள் காத்திருக்கின்றன. அதேநேரத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பம் செய்து தங்களுக்கு பிடித்த படிப்புகள் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 10-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அதேநேரத்தில் சி.பி.எஸ். இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் அடையும். மேலும் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்காக அந்நாட்டு கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை தொடங்கும்.

    Next Story
    ×