search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்த மருத்துவ முகாம்"

    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆய்வு நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

     வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆய்வு நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பாக உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் இலக்குமணன், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி அளித்தார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பில் உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன. சிங்கிபுரம் நல வாழ்வு மைய செவிலியர்கள் கிரீஷ்மா, கனகராணி, அனுராதா, அபிநயா ஆகியோர் பரிசோதனை செய்தனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜன் நன்றி கூறினார்.

    • நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம், பேரூர் தி.மு.க. மற்றும் ஸ்ரீ சாய் சித்த வேதா கிளினிக் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் மழைக்காலத்தில் ஏற்படும் மர்ம காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு சித்த மருத்துவம் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம், பேரூர் தி.மு.க. மற்றும் ஸ்ரீ சாய் சித்த வேதா கிளினிக் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை வகித்த தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முகாமை தொடங்கி வைத்தார்.

    பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை, பேரூராட்சி தலைவர் சுகாசினிப்ரியா கதிரேசன ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் கதிரேசன் வரவேற்றார்.முகாமில் மழைக்காலத்தில் ஏற்படும் மர்ம காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு சித்த மருத்துவம் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், கவுன்சிலர்கள் தியாகு,சிலம்பு செல்வன்,அமைப்புசாரா ஓட்டுநரணி பொறுப்பாளர் சுந்தர் மற்றும் ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்டை பகுதி தி.மு.க. கிளைச் செயலாளர் அழகர் நன்றி கூறினார்.

      வாழப்பாடி:

      மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ- சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ முகாம், வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூரில் நடைபெற்றது.

      இம்முகாமில், வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார். யோகா பயிற்சியாளர் அருள் மணிகண்டன், பொதுமக்க ளுக்கு எளிய முறை யோகா பயிற்சி அளித்தார்.

      இந்த முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன.

      • முகாமில் யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
      • மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

      வள்ளியூர்:

      நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி தாவரவியல் துறை, அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

      நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பாளை யங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசி ரியர் மனோகரன் மற்றும் காமராஜ் நடுநிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எம். ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

      முகாமில் வர்ம மருத்து வத்துறை தலைவர் முனிஸ்வரன், புற மருத்துவ துறை மருத்துவர் சுஜாதா, விரிவுரை யாளர் பிச்சையாகுமார், மருத்துவ தாவரவியல் துறை ராஷேஸ், தாவரவியல் துறை தலைவர் விஜயா, காமராஜ் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் லியோன்ஸ் லெட்டிசியா தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      முகாமில் கல்லூரி பேராசி ரியர் பாலமுருகன், அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் பாலச்சந்திரன், பயிற்சி பயிற்றுநர் இளங்கோ ஜெகதீஸ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ முகாமில் தெற்கு கள்ளி குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் சளி காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுவலி, கழுத்து வலி மற்றும் வர்மம், புறமருத்துவம், யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டது.

      மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி நிர்வாகம், தாவரவியல் துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டு குழு இணைந்து செய்திருந்தனர்.

      • முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
      • முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

      திருவட்டார் :

      பொன்மனை பேரூராட்சியும் முஞ்சிறை தனியார் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து பேரூராட்சி அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தின. பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயமாலினி, துணை தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் சாந்தி, கீது அமலாபுஷ்பம், சித்த மருத்துவ டாக்டர்கள் அரவிந்த், சுனிதா, மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

      முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இருமல், சளி, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கழுத்து, இடுப்பு, எலும்பு தேய்மானம், பெண்களுக்கான உடல் பருமன், தைராய்டு கோளாறு, மாதவிடாய் கோளாறு குழந்தைகளுக்கான கணம், உடல்மெலிவு போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

      • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கோவில் வளாகத்தில் வைத்து இலவச சித்த மருத்துவ முகாம்
      • சித்த மருந்து, மாத்திரைகள், எண்ணைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது

      கன்னியாகுமரி :

      பார்வதிபுரம், ஜூலை.30-

      நாகர்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் 17-வது நினைவு தினம் மற்றும் அவரது மனைவி பாப்பா 3-வது நினைவு தினத்தையும் முன்னிட்டு நாகர்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ்-ம், கிருஷ்ணன் கோவில் ஆதிபரா சக்தி சக்தி பீடமும் இணைந்து நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் யாதவர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் வைத்து நாளை (31-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கோவில் வளாகத்தில் வைத்து இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துகிறது.

      எம்.எஸ்.எஸ். ஆசான் நினைவாக நடைபெறும் இந்த முகாமில் ஏராளமான சித்த மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நோய்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்குகின்றனர். மேலும் முகாமின் போது சித்த மருந்து, மாத்திரைகள், எண்ணைகள் அனைத்தும் அங்கு வந்து ஆலோசனைகளை பெறும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ், சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் மற்றும் சக்தி பீடத்தினர் செய்து வருவதாக எம்.எஸ்.எஸ்.ஆசான் அன் சன்ஸ் உரிமையாளர் மகாலிங்கம் என்ற பிரகாஷ் தெரிவித்தார்.

      மேலும் அவர் இந்த இலவச முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

      • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
      • முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

      சிங்கம்புணரி

      சிங்கம்புணரி வட்டாரம் செல்லியம்பட்டி கிராமத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறை, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

      இம்முகாமில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டதுடன் மூலிகை கண்காட்சி, வர்ம சிகிச்சை மாணவர்களுக்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.

      இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சின்னையா, தலைமை ஆசிரியர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சரின் விரிவான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 200 பேருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இயன்முறை மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சித்தமருத்துவர் சரவணன் மற்றும் ரஹிமா பானு ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

      முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

      • இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
      • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

      பெரம்பலூர்:

      பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையில், பெரம்பலூர் சித்த மருத்துவ அலுவலர் விஜயன் மற்றும் சித்த மருத்துவர்கள் கலெக்டர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொது உடல் பரிசோதனை மற்றும் அனைத்து தோல் நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, மூட்டு வலி, கழுத்து வலி, சிறுநீரக கல் உடைப்பு, பித்தப்பை கல்லடைப்பு, வயிற்றுப்புண், சர்க்கரை நோய், சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு நோய், கருப்பை கட்டி மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்தனர். முன்னதாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் இயற்கை மூலிகை குறித்து கண்காட்சியாக காட்சிப்படு த்தப்பட்டிருந்தது. இதே போல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவு பிரதி வாரம் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது."

      ×