வாழப்பாடி அருகே ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ முகாம்

சித்த மருத்துவ முகாமில் யோகா பயிற்சி பெற்ற பொதுமக்கள்.
சித்த மருத்துவ முகாமில் யோகா பயிற்சி பெற்ற பொதுமக்கள்.
Published on

வாழப்பாடி:

மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ- சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ முகாம், வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூரில் நடைபெற்றது.

இம்முகாமில், வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார். யோகா பயிற்சியாளர் அருள் மணிகண்டன், பொதுமக்க ளுக்கு எளிய முறை யோகா பயிற்சி அளித்தார்.

இந்த முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com