search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்சிபாஸ்"

    • முதல் காலிறுதியில் சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரரை எதிர்கொள்கிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற இருந்த இரண்டாவது காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக விலகியதால், சக நாட்டு வீரர் லாரன்சோ முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதனால் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியை சிட்சிபாஸ் மோதுகிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் சிட்சிபாஸ், ஜிரி லெஹெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ், செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ரஷியாவின் காரென் கச்சனாவ், அமெரிக்காவின் செபாஸ்டிகோர்டாவுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6, 6-3 என இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றபோது காயம் காரணமாக கோர்டா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கச்சனாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-4, 6-4 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை சிட்சிபாஸ் 6-3 கைப்பற்றினார்.

    இறுதியில், சிட்சிபாஸ் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, போலந்தின் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் கோர்டா 3-6, 6-3, 6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் 2ம் சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆஸ்திரேலிய வீரர் நிக் கிரியாஸ் காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடம் மோதினார். இதில் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வென்றார்.

    உலகின் 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ரிங்கி ஹிஜிகதாவை (ஆஸ்திரேலியா) வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் நடால், ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர்.
    • ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தோல்வியடைந்தார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் டேனில் மெத்வதேவ் (ரஷியா) தன்னை எதிர்த்த மார்கோஸ் கிரோனை (அமெரிக்கா) 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

    4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் குவான்டின் ஹேஸ்சை (பிரான்ஸ்) வெளியேறினார்.

    ஹர்காக்ஸ் (போலந்து), ஷபோவலோவ், அலியாசிம் (கனடா), ஜேனிக் சினெர் (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (7-3), 3-6, 6-1, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மோல்கனிடம் (சுலோவேனியா) போராடி வீழ்ந்தார்.

    ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் நிக் கிரியாஸ் கால் முட்டி காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் கொலம்பிய வீரரிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.

    முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சிட்சிபாஸ் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
    • முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷிய வீரர் டேனில் மெதவதேவுடன் மோதினார்.

    இந்த போட்டியில் சிட்சிபாஸ் 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளார்.
    • முன்னணி வீரரான ஆன்டி முர்ரே 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், லிதுவேனியா வீரர் பெரான்கிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் 5-ம் நிலை கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார். இதில் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.

    ×