என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டென்னிஸ்
X
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - சிட்சிபாஸ், கச்சனாவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்24 Jan 2023 11:22 PM IST
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் சிட்சிபாஸ், ஜிரி லெஹெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ், செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ரஷியாவின் காரென் கச்சனாவ், அமெரிக்காவின் செபாஸ்டிகோர்டாவுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6, 6-3 என இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றபோது காயம் காரணமாக கோர்டா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கச்சனாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story
×