search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஎஸ் ஓபன்"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் பெரேட்டினி வெற்றி பெற்றார்.
    • போகினோவை வீழ்த்திய பெரேட்டினி காலிறுதிக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயினின் அலெஜாண்டிரியோ டேவிடோவிச் போகினோ ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டில் தோல்வி அடைந்த பெரேட்டினி அடுத்த 2 செட்களை தனதாக்கினார். நான்காவது செட்டை மீண்டும் போகினோ கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பெரேட்டினி வென்றார்.

    இறுதியில், 3-6, 7-6, 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் போகினோவை வென்ற பெரெட்டினி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆண்டி முர்ரேவை வீழ்த்திய இத்தாலி வீரர் பெரெட்டினி 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி ஆகியோர் மோதினர்.

    முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட்டை பெரெட்டினி வென்றார்.

    இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட் முர்ரேவை வென்ற பெரெட்டினி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2வது ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
    • ஆண்டி முர்ரே அமெரிக்க வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் எமிலோ நாவாவைச் சந்தித்தார். முதல் செட்டை கோட்டை விட்ட ஆண்டி முர்ரே அடுத்த மூன்று செட்டையும் தனதாக்கினார்.

    இறுதியில், ஆண்டி முர்ரே 5-7 6-3 6-1 6-0 என்ற கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி, பிரான்சைச் சேர்ந்த ஹியூகோ கிரெய்னியரைச் சந்தித்தார்.

    இதில், 2-6, 6-1, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பெரெட்டினி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் கொலம்பிய வீரரிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.

    முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    • சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார்.

    முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார். ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • ஆண்டி முர்ரே முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் அமெரிக்க வீரர் ஸ்டீபன் கோஸ்லோவை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதினார்.

    இதில், முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-2, 6- 4, 6- 0 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
    • இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.

    நியூயார்க்:

    செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (35). உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட்கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    ×