search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்பனை"

    • திண்டிவனத்தில் சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து ஒருவர் பலியானார். இது தொடர்பாக திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிகோடி தெருவைச் சேர்ந்த மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டிவனம் தீர்த்த குளம் மேம்பாலம் அருகே, திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட முற்பட்ட தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் 15 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் கிடங்கல் ஏரிக்கரை அருகே சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 12 லிட்டர் சராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழங்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ய போவதாக ஆம்பூர் மற்றும் உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ராதிகா, ராஜேஸ்வரி, சந்திரன், பிச்சைமணி, ராஜா, கோபி வீட்டில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சேஷசமுத்திரம், தியாகராஜபுரம், சிவபுரம், நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(வயது 42), சுப்பிரமணி்(43), தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்(45), கோபால் (48), நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு(37), திருமுருகன்(32), சிவபுரம் கிராமம் பச்சையப்பன்(36), விரியூர் கிராமம் டேவிட்ஆனந்தராஜ்(41) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • 55 லிட்டர் பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் கள்ள சாராயம் விற்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது 43) என்பவர் குன்னத்தூர் அருகே மலையடிவாரத்தில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் தேவேந்திரனை கைது செய்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புளியங்கொட்டை, கொடியனூர் ஆகிய கிராமங்களில் 2 வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்தபழனியம்மாள் (வயது 56), கொடியனூரை சேர்ந்த சென்னம்மாள் (37) ஆகிய 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் புளியங்கொட்டை, கொடியனூர் ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள 2 வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த புளியங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 56), கொடியனூரை சேர்ந்த சென்னம்மாள் (37) ஆகிய 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது36) என்பவர் எஸ்.வி.பாளையம் சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • இதேபோல் சாராயம் விற்பனை செய்த செல்வம்(42), பூபதி (52) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல்செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராயப்பன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது36) என்பவர் எஸ்.வி.பாளையம் சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்பனை செய்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(42), புதுப்பா லப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி (52) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
    • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு, ஊராங்காணி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசம் பட்டுகுளம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஊராங்காணி கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ேபாலீசார் மடக்கி பிடித்தனர்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீசார் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சம்பட்டு பகுதியில் சுடுகாட்டில் கருணாகரன் (வயது52) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அதேபோன்று சின்னவரிகம் சுடுகாட்டில் கிருஷ்ணமூர்த்தி (65) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். தென்னம்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்த தசரதன் (40) ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.

    இவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 220 சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டு பகுதியில் நேற்று மாலை உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரின் குட்டை அருகே ஈச்சம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சித்ரா (வயது58) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் இது போன்ற நேற்று பல்வேறு கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில சாராய வியாபாரிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    • கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் .
    • போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்..

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (32) என்பவர் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். 

    • போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர்.
    • எரிசாராய பாக்கெட்களை அரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ)சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி பாரதி நகர் வடக்கு தெரு முருகன் மனைவிகிருஷ்ணவேணி (வயது50).இவர்வீட்டின் பின்புறம் அரசால்தடைசெய்யப்பட்டஎரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடம் இருந்து எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஜெயலட்சுமி வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி தாலுகா பெரியஎலந்தம்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 70) என்பவர் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×