search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலப்போட்டி"

    • கோலப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 12 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசைபாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசு பெற்ற சுப்புலட்சுமிக்கு பிரிட்ஜ், 2-ம் பரிசு பெற்ற குருக்கள்பட்டியை சேர்ந்த பெண்ணிற்கு கிரைண்டர், 3-ம் பரிசு பெற்ற பெண்ணிற்கு மிக்ஸி மற்றும் ஆறுதல் பரிசாக 12 பேருக்கு குக்கர் வழங்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், இளைஞர் அணி சரவணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம், காளிசாமி மற்றும் பிரகாஷ், ரகுமான், ஜெயக்குமார், கேபிள் கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிரபாகரன் மற்றும் நகர நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் தின விழா கோலப்போட்டி கோவில்பட்டி ராஜீவ் நகரில் நடைபெற்றது.
    • சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டி நடை பெற்றது.

    கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கவுணியன் பதின்ம பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கோலங்கள் இட்டு அசத்தினர்.

    இதையடுத்து சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழக்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆசிரியை அமல புஷ்பம் வரவேற்றார். சத்தியபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் லதா வெங்கடேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் "கொண்டாடுவோம் ஒன்றி ணைவோம்'' என்ற தலைப்பில் கோலப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், அமெரிக்கா,சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களை போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர் ரோஜாக்கூட்டம், மல்லிகைத் தோட்டம், தாமரைத் தடாகம், செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி குடும்பம் என 5 குழுக்களாக வகைப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கொங்கரத்தி கிராமத்தை சேர்ந்த செல்வி நாராயணன் சிறந்த கோலநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பெற்றார். மற்ற வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்காசுகளும், எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 3 பேரை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லத்தரசு காளிதாசன், பாஸ்கரன், ஆறுமுகம், கிருஷ்ணன் சக்தி, வெள்ளைக்கண்ணு, ஜெயக்கண்ணன், போஸ், சத்திய நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா பணிகளில் ராமநாதன் கவுதமன், ஆண்டாளியார், ஜெயக்குமார், பாஸ்கரன், அன்புச்செழியன், முருகானந்தம், சிவராஜன், கண்ணதாசன் ஈடுபட்டனர்.

    • உதயநிதி பிறந்தநாள் விழா:
    • விராலிமலையில் தி.மு.க சார்பில் கோலப்போட்டி

    புதுக்கோட்டை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 35-வது நிகழ்ச்சியாக, மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே செல்லப்பாண்டியன் தலைமையில் விராலிமலை மேற்கு ஒன்றியம், விராலிமலை ஊராட்சி 5-வது வார்டில் விராலிமலையில் தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் ஏற்பாட்டில் கோலப்போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்கள் வரைந்தனர். நிகழ்வில், ஒன்றிய செயலாளர் இளங்குமரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் எம்.பழனியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செ.குறிஞ்சிவாணன், ஒன்றிய நிர்வாகிகள், ஏ.பி.ஆர்.ராஜாங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, பிரபாகரன் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


    • கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அறிவுறுத்தலின்படி நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் தலைமை தாங்கினார்.

    விழாவில் தென்பழஞ்சி பகுதி முழுவதும் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு கோலம் போட்டனர். இதில் காயத்ரி என்பவர் முதல் பரிசான பிரிட்ஜை வென்றார். 2-ம் பரிசாக வாஷிங்மெஷினை அருணா பெற்றார். நதியா என்பவர் 3-ம் பரிசாக மிக்ஸியும், மகாலட்சுமி என்பவர் 4-ம் பரிசான கிரைண்டரையும் பெற்றனர்.

    மேலும் சிறப்பாக கோலம் போட்ட 8 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குக்கர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 2 பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் நான்ஸ்டிக் தவா வழங்கப்பட்டது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான தென்பழஞ்சி சுரேஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் விமல் முன்னிலை வகித்தார்.

    தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கிளைசெயலாளர்கள் பரிதி, கருப்பையா, போதுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×