முதல்-அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவிலில் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோலப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 12 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது.
முதல்  பரிசு பெற்ற பெண்ணுக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது.
முதல் பரிசு பெற்ற பெண்ணுக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசைபாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசு பெற்ற சுப்புலட்சுமிக்கு பிரிட்ஜ், 2-ம் பரிசு பெற்ற குருக்கள்பட்டியை சேர்ந்த பெண்ணிற்கு கிரைண்டர், 3-ம் பரிசு பெற்ற பெண்ணிற்கு மிக்ஸி மற்றும் ஆறுதல் பரிசாக 12 பேருக்கு குக்கர் வழங்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், இளைஞர் அணி சரவணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம், காளிசாமி மற்றும் பிரகாஷ், ரகுமான், ஜெயக்குமார், கேபிள் கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிரபாகரன் மற்றும் நகர நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com