search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பரிசோதனை"

    • 5 நாளில் 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாத துவக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிய பாதிப்பு, கடந்த 4நாட்களாக இரட்டை இலக்கத்துக்கு மாறியுள்ளது.

    இதனால் 5 நாளில் 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை கண்காணி ப்பில் இருப்போரின் எண்ணிக்கை 90 ஐ எட்டியது. தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனை களை அதிகப்படுத்த மாவட்ட மருத்துவத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இனி 100 முதல், 150 பேருக்கு பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    • சுகாதாரத்துறை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • கொரோனா பரவல் குறித்து கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக பொது மக்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காரைக்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இதையடுத்து சுகாதாரத்துறை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற சில பரிசோதனை புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 என மொத்தம் 31 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனிடையே கொரோனா பரவல் குறித்து கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி சண்டே மார்க்கெட், தியேட்டர்கள், மருத்துவமனைகள் ஆகிய பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வலியுறுத்த வேண்டுமென சுகாதாரத் துறை சார்பில் கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 54 வயதான ஒருவர் கடந்த 23-ந் தேதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவர் கடந்த 23-ந் தேதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக சுகாதாரத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்
    • கொரோனா பாதிப்பு காரணமாக 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை,

    நாட்டில் 2-வது அலையாக கொரோனா தொற்று பரவிய போது கோவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் சிகிச்சை பலன் அளிக்காமல் கொரோனாவுக்கு பலியானார்கள்.

    அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 837 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 112 பேர் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.

    தமிழக அளவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு கோவை முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை யின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 800-ஐ கடந்து உள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறியதாவது:-

    கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரி சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர் பில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரும் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றால் கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    சென்னை:

    உலக நாடுகளையே உலுக்கிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட தவறவில்லை.

    2021-ல் 2-வது அலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, மருந்து பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    அரசின் தீவிர நடவடிக்கை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா மறைந்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்து சகஜ நிலைக்கு திரும்பினார்கள்.

    ஆனால் இந்த வைரஸ் முற்றிலும் மறைந்து விடாமல் இந்தியாவில் பரவும் நிலையை மீண்டும் அடையலாம் என்று அப்போதே நிபுணர்கள் கூறியது போல் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

    அதிலும் அசுர வேகத்தில் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 350 பேர் வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நேற்று 76 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகி இருக்கிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்கான விதிமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பயப்பட தேவை இல்லை. கொரோனா கட்டுப்பாட்டை ஒவ்வொரு வரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    • ஜேடர்பாளையம் பகுதியில் இருந்து கைதான 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டை பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை, அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு கடந்த 16-ந் மாலை மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இதேபோல் வடகரையாத்தூர் ஊராட்சி வி.புதுப்பாளையத்தில் இருந்த வெல்லம் தயாரிக்கும் ஆலை, வடமாநிலத் தொழிலாளர்களின் குடிசைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களை பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதற்காக, 6 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிரபு (வயது 27), பிரகாஷ் (29) ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜேடர்பாளையம் பகுதியில் இருந்து கைதான 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.
    • இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் 3 லட்சம் டோஸ்கள் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.

    'இன்கோவாக்' எனப்படும் இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி 'இன்கோவாக்' கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது கோவின்-ல் கிடைக்கிறது.

    இன்கோவாக் மருந்தின் தனியார் சந்தை விலை ரூ.800-க்கும், அரசு வினியோகத்துக்கான விலை ரூ.325 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் 3 லட்சம் டோஸ்கள் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "2 நாட்களுக்கு நாங்கள் சில தனியார் மருத்துவமனைகளுக்கு 3 லட்சம் டோஸ் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பியுள்ளோம். சில நாடுகள் இந்த தடுப்பு மருந்துகளுக்காக எங்களை அணுகியுள்ளன," என்றார்.

    • கொரோனா நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.
    • சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.

    பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

    இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்.

    இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.

    இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

    • உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.
    • சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.

    இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. புதுவையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவையில் நேற்று பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவையில் கடந்த நவம்பர் 27-ந் தேதி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் பொது இடங்களில் முக கவசம் அணிய புதுவை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாய் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என கொரோனா பாதிப்பு இருந்தது.

    நேற்று 680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுவையில் 2, காரைக்காலில் 2,ஏனாமில் ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வீடுகளில் 20 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உருமாறிய கொரோனா பாதிப்பு புதுவையில் இல்லை. போதிய தடுப்பூசி உள்ளதால் விடுப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    லண்டன்:

    சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இங்கிலாந்தும் கட்டுபாடு விதித்து இருந்தது. சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

    ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கொரோனா உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நிலையில், அவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது.
    • உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    பீஜிங்:

    புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    புது வகை கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. சீனா கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது. அனைவரும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரானின் மரபணு மாற்றம் அடைந்த 'பி.எப்.7' வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பலர் சென்னையில் இயல்பாக சுற்றித் திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிவதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஓட்டல்கள், கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

    பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்களும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×