search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் கட்டாயமாக்க முடிவு
    X

    புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் கட்டாயமாக்க முடிவு

    • சுகாதாரத்துறை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • கொரோனா பரவல் குறித்து கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக பொது மக்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காரைக்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இதையடுத்து சுகாதாரத்துறை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற சில பரிசோதனை புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 என மொத்தம் 31 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனிடையே கொரோனா பரவல் குறித்து கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி சண்டே மார்க்கெட், தியேட்டர்கள், மருத்துவமனைகள் ஆகிய பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வலியுறுத்த வேண்டுமென சுகாதாரத் துறை சார்பில் கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×