search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona Test"

    • கொரோனா நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.
    • சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.

    பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

    இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்.

    இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.

    இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

    • கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது.
    • சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இதுதவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒருசில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிக்கின்றனர்.

    அவர்களின் நோக்கம் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பது தான். ஆனால் வீட்டுக்கு சென்ற உடல்நிலை மேலும் மோசமடைந்து அதற்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்று பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது.
    • ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல.

    திருச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்மைக்காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் துறையின் அலுவலர்களுடனான கூட்டத்தை நடத்தி அதில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார்.

    அந்த வகையில் சர்வதேச விமானங்களில் வருபவர்களை கடந்த காலங்களில் 2 சதவீதம் பரிசோதனை தொடர்ந்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதன்படி திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற ஐந்து நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகளுக்கு 100 சதவீத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. பிளட் ஆர்ட் என்ற ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது, குறிப்பாக காதலர்களுக்குள் அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. இது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும்.

    அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும் போது, அந்த ரத்தம் எச்.ஐ.வி. போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே இந்த தகவல் தெரிந்தவுடன் நேற்றைக்கு சென்னையில், வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற பிளட் ஆர்ட் நிறுவனங்களில் நமது மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

    அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுளளது. இதோடு இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடைவிதிக்கப்படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    முகக்கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பது தனிமனித இடைவெளி பின்பற்றுவது என்பது கொரோனா விதிமுறைகளுள் ஒன்றுதான். அது இன்னும் நீக்கப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு என்பது உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருப்பதால் முகக்கவசம் அணிவது அவரவர் உயிரை அவரே பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

    பி.எ.5 என்கின்ற வைரஸின் உள்உருமாற்றம் பி.எப்.7 ஆகும். இது எந்த அளவிற்கு பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பதை தற்போது கணிக்க முடியாது. ஆனால் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி பல உயிர்கள் பிரிய காரணமாக உள்ளது.

    ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சர் தடுப்பூசி போடும் பணியினை ஒரு இயக்கமாகவே மாற்றிய காரணத்தினால் முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதத்தையும், 2-ம் தவணை 92 சதவீதத்தையும் தொட்டிருக்கிறது. பூஸ்டர் தவணை தடுப்பூசி கையிருப்பு இருந்தவரை போடப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது தமிழ்நாட்டில் 90 சதவீதம் தொட்டிருக்கிறது. எனவே கடந்த 6 மாதங்களாக கொரோனாவிற்கான உயிர்இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, பாதிப்பும் 10 என்ற எண்ணிக்கையின் கீழே நிலவிக்கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.
    • இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    ஆலந்தூர்:

    உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையம் சர்வதேச முனையம் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தமிழக சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.

    இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

    அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2 சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 600 பயணிகளுக்கு புதிய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    விமானங்களில் வரும் போது, இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகளை 2 சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர்.

    குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன. இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது.

    ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    அதோடு அந்தப் பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்தூரில், ஜனவரி 7-ந் தேதி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது.

    புதுடெல்லி :

    சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

    அதனால், இந்தியா கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஒவ்வொரு சர்வதேச விமானத்தில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்காவது கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த உத்தரவு, சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

    இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில், பண்டிகை விடுமுறைக்கு இந்தியா வர திட்டமிட்டிருந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பயண திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், ஜனவரி 7-ந் தேதி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அங்கு செல்ல திட்டமிட்டு இருந்த இந்தியர்கள், விமான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர். இந்தூரில் தங்கும் விடுதியையும் முன்பதிவு செய்து விட்டனர். இந்த நேரத்தில், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் இந்திய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் அங்குர் வைத்யா, தாங்கள் குழப்பத்தில் இருப்பதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள பீகார் அறக்கட்டளையின் தலைவர் அலோக் குமாரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.

    அதே சமயத்தில், இந்த மாநாட்டை தவிர்த்து, விடுமுறையை கழிக்க வர வேண்டிய இந்தியர்கள், ஏற்கனவே குடும்பத்துடன் வந்திருப்பார்கள் என்றும், அவர்களுக்கு இந்த உத்தரவால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆனால், சீனாவில் கொரோனாவால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அங்கிருந்து யாரும் இந்தியா வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

    • மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
    • பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    • திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது.
    • விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை (‘ரேண்டம்’) நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ளது.

    இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அந்த வகையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகிற விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ('ரேண்டம்') நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச, இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
    • சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

    சென்னை :

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

    அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலைய இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், 'விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் கொரோனா பரிசோதனை இனிமேல் தேவையில்லை. இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. விமான பயணிகளில் அறிகுறி உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி வெப்பமானி மூலம் மேற்கொள்ளப்படும் உடல் வெப்பநிலை பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    அதேபோன்று மற்றொரு சுற்றறிக்கையில், 'அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் இதர நோய்களுக்கான சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது. அதாவது, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், கர்ப்பிணி உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படுவதை உறுதி செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • எனவே கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரா கொரோனா 2-வது அலையால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. கொரோனா தொற்று பாதித்த ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல்முறையாக முழுமையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்பட்டது. உண்டியல் வருமானமும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் அதிகபட்சமாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 500 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 150 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 60 பேரும், பிரகாசம் 30 பேர், சித்தூர் மாவட்டத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்குமாறு கூறியுள்ளனர். ஆந்திராவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அம்மாநில மக்கள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளனர்.

    • கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிப்பு
    • ரோகித் சர்மா தனிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார்.

    லண்டன்:

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இதில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

    முன்னதாக மாலத்தீவு சென்று விட்டு திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் தப்போது குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    • கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.

    தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.

    அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதைய டுத்து, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் தினமும் 300 முதல் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வந்தது. ஆனால், தற்போது 600 முதல் 700 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பள்ளிகளும் திறக்கப்ப ட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோத னைகளை அதிகரிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோத னையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது தினமும் 600 முதல் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இவர்களின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.பொது இடங்கள் மற்றும் கூட்ட மாக உள்ள இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடித் தல் போன்ற தடுப்பு நடவடிக்வேகைகளை மேற்ெகாள்ள வேண்டும்.

    குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளா கங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுகள், ஆஸ்பத்தி ரிகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×