search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடை விழா"

    • செங்கோட்டை அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 8 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
    • கொடைவிழாவை முன்னிட்டு கோவிலில் நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள மிகபிரசித்தி பெற்று விளங்கும் அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி திருக்கால் நாட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அப்பாமாடசாமிக்கு ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜை, அருள் பிரசாதங்களையும் மண்டகப்படிதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கொடைவிழா முன்னிட்டு 22-ந்தேதி இரவு குடியழைப்பு, குற்றாலம் தீர்த்தம் எடுத்தல் மற்றும் விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கொடை நாட்களில் மதியம் உச்சிகால பூஜையும், சாஸ்தா புறப்பாடு, சிறப்பு பூஜை மற்றும் மாலை மணிகண்டன், சரவணன் குழுவினரின் மகுடம் ஆட்டம், மாரியம்மாள் தங்கராஜ் வில்லிசையும் நடைபெற்றது. நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேமிசங்களை செலுத்தினர். செங்கோட்டை, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) மதியம் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

    • ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது.
    • சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பரமன்குறிச்சியை அடுத்த வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் அம்மன், செல்வவிநாயகர், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, சப்பர பவனி, கரகாட்டம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, 108 பால்குடம் பவனி, சுமங்கலி பூஜை, மஞ்சள் நீராடி அம்மன் வீதியுலா வருதல், நண்பகல் மற்றும் நள்ளிரவில் நேரங்களில் அலங்கார பூஜையுடன் கும்பம் தெருவீதி உலாவருதல், கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்கல், இரவில் திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
    • செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.

    தொடர்ந்து யாக சாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்து கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும், பிற்பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, நாளை (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    9-ந் தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு 7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் பூஞ் சப்பரத்தில் பவனி, 10-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.

    • கொடை விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமை வில்லிசை, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள கார்த்திகைவடலி இசக்கியம்மன் கோவிலில் கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு திருவாதவூரர் திருவாசக முற்றோதுதல் பேரவை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சிறுசேமிப்பு பரிசு வழங்குதல், 8.30 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு வில்லிசை, 7 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு வில்லிசை ஆகியவையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவையும் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
    • முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி அம்மன் கோவில் தெரு செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 28-ந் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் வரை கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    மதியம் அன்னதானம் நடந்தது. இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணியளவில் கும்ப அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 2 மணி அளவில் மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று மாலை 5 மணி அளவில் முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகில் உள்ள இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புனிதநீர் தீர்த்தம்

    25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் இரவு வில்லிசை நிகழ்ச்சியும், நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை வருஷா பிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் அன்று இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவிலை சுற்றி வந்து கும்மியடித்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும் தொடர்ந்து கரகாட்டம், நையாண்டி மேளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமக்கொடை, தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் வாண வேடிக்கையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கை, கரகாட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    இன்று மதிய கொடையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை சந்திப்பு அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது
    • தினமும் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை சந்திப்பு அருகே அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் ஆவணி கொடை விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

    இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆவணி மாத கொடை விழா கடந்த 4-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பத்தாம் கொடை விழாவான கடந்த செவ்வாய்கிழமை அன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு நிர்மாலய தீபாராதனை, 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகமும், 1 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும், நள்ளிரவு 12.15 மணிக்கு அருள்மிகு சுடலைமாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு ஊட்டுப்படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நிறைவு நாளான நேற்று நண்பகல் 12.30 மணிக்கு தீபாராதனையும் அதனை தொடர்ந்து நடைபெற்ற பூப்படைப்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் மகேஷின் துணைவியார் மேகலா மகேஷ், நாஞ்சில் முருகேசன் துணைவியார் தங்க தேவிகா, 11 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா உட்பட ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். பூப்படைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், அதன்பின் அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நற்பணி மன்ற தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் செயலாளர் வேலு, பொருளாளர் சிவலிங்கம், துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்த கொடைவிழாவில் தினமும் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • பூப்படைப்பு நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.
    • ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை சந்திப்பு அருகே அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா கடந்த 4-ந்தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. 10-ம்நாள் விழாவான கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு நிர்மால்ய தீபாராதனை, 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, நள்ளிரவு 12.15 மணிக்கு சுடலை மாடசாமிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு ஊட்டுப்படைப்பு ஆகியவை நடந்தது.

    நிறைவு நாளான நேற்று மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து நடைபெற்ற பூப்படைப்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மேயர் மகேஷின் மனைவி மேகலா மகேஷ், நாஞ்சில் முருகேசனின் மனைவி தங்க தேவிகா, 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா உள்பட ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பூப்படைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நற்பணி மன்ற தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் செயலாளர் வேலு, பொருளாளர் சிவலிங்கம், துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கியது. எட்டாவது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு வானவேடிக்கை ஆகியவை நடந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு பொன் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நேற்று காலை 8 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டுதல் நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சினிமா இசை குழுவினருடன் பாட்டு கச்சேரி நடந்தது.

    விழா ஏற்பாடுகளை மாவடி பண்ணை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நேற்று நடைபெற்றது.

    மாவடிபண்ணை 18பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கோவிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடைபெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனையும், அதை தொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் வீதிஉலா செல்லும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மதியம் பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

    அம்மன் நகர்வலம்

    விழாவை முன்னிட்டு நேற்று இரவுஅம்பாளுக்கு விசேஷ தீபாராதனைக்கு பின் இரவு 12.05 மணிக்கு நையாண்டி மேளம், தம்பாமேளம், செண்டா மேளத்துடன் வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு பொங்லிடுதல், பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விசேஷ பூஜை, பகல் 1 மணிக்கு முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் சமுதாய கமிட்டி தலைவர் தங்ககுட்டி நாடார் உட்பட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தமிழ்நாடு துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், முள்ளக்காடு ஊராட்சிமன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், பொன் முகிலன், பொன்மாடசாமி பிரதர்ஸ், ஆறுமுகம் ஜுவல்லர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பலவேச கார்த்திகேயன், உப்பு உற்பத்தியாளர்கள் எல்.ஆர்.சிவாகர், ஞானவேலன், முகேஷ் சண்முகவேல், அழகேசன் நாடார், தங்கராஜ் நாடார், அருணாச்சல பாண்டியன், பொன்ராம், திவான் ராஜசேகர், தூத்துக்குடி ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளர் பிரபாகர், தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எம்.ஸ்டாலின், ஸ்ரீ சண்முகா காண்ட்ராக்டர் அழகேசன், விஜய் கேபிள் பொன்ராஜ், முத்துவிஜய், முல்லை லதாசவுண்ட்ஸ் முத்துக்குமார், முள்ளக்காடு வியாபாரி சங்க செயலாளர் முத்துராஜ், தலைவர் முனிய கங்கநாடர், அருண் பழமுதிர்ச்சோலை சுந்தர்ராஜ் நாடார், அருண், விஜயா மெடிக்கல் ஜெயபாண்டி நாடார், செந்தில்குமார், முள்ளக்காடு தி.மு.க. நிர்வாகி சில்வர் சிவா, பி.பி.ஜி.சவுண்ட்ஸ் உரிமையாளர் ஈசாக், பாவா ஹோட்டல் உரிமையாளர் செல்வகுமார், பிரம்மசக்தி சால்ட் நடராஜன், பிரம்மசக்தி ஸ்டோர்ஸ் ராமஜெயம், சக்தி டெக்ஸ்டைல் சரவணன், முருகேசன் நாடார் சன்ஸ் சுந்தரம் சுப்பிரமணியன் நடராஜன் மற்றும் முல்லை அஜித் குருப்ஸ் சோலைகுமார், பாலாஜி, பிரேம், முத்துச்செல்வன், சரவணன், தனசேகர், எஸ்.ஆர். சண்முகநாதன் உட்பட ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 11 நாட்கள் நடைபெறுகிறது
    • விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பாலபண்ணை சந்திப்பு அருகே அமைந் துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் ஆவணி கொடை விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் ஆவணி கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்ப மாகி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 12 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தீபாராதனை, வெள்ளை சாத்து அலங்கார மும், மாலை 6 மணிக்கு தாலப்பொலி ஏந்தி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விளக்கு வழிபாடு நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷின் மனைவி மேகலா மகேஷ் தொடங்கி வைக்கிறார். இரவு 9 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.

    11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 மணிக்கு நிர்மாலய தீபாராதனை, 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை அதனை தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு உச்ச கால தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சாயராட்சை, மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அலங்கார தீபாராதனையும் நடைபெறும். மூன்றாம் நாளான வருகிற செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சிவப்பு சாத்து அலங்காரமும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு எண்ணெய் குளிப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறும். 6-ம் கொடை விழாவான வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பச்சை சாத்து அலங்காரமும், இரவு 8 மணிக்கு பாயாச குளிப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.

    எட்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு அம்மன் நகர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவிலில் இருந்து ஆரம்பமாகும் இந்த நகர்வ லம் நிகழ்ச்சி நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் தெரு, நெசவாளர் காலனி, ராணி தோட்டம், அனந்தன் நகர், அரசு மருத்துவ கல்லூரி, கீழபெருவிளை, பார்வதி புரம், கட்டையன்விளை, கேசவ திருப்பாபுரம், பள்ளி விளை, வாத்தியார் விளை, கிருஷ்ணன் கோவில் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சி.பி.எச். ரோடு, வடசேரி ஆராட்டு ரோடு வழியாக வடசேரி மும்முடி சோழ விநாயகர் ஆலயத்தில் வந்து இரவு தங்குகிறது.

    பின்னர் மறுநாள் காலை 7 மணிக்கு தங்குமிடத்தில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனையும் அதன்பின் அம்மன் மீண்டும் நகர்வ லம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வடசேரி, கட்டபொம்மன் சந்திப்பு, மீனாட்சிபுரம், வைத்திய நாதபுரம், பீச் ரோடு ஜங்ஷன், பெரிய விளை, பாரதி நகர், சற்குண விதி பழைய ஸ்டேட் பேங்க் காலனி வழியாக திருக்கோவிலை இரவு வந்தடைகிறது. அன்று இரவு 9 மணிக்கு சாஸ்தாவுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

    பத்தாம் கொடை விழா வான செவ்வாய்க்கிழமை அன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு நிர்மாலய தீபாராதனை, 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தல் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகமும், 1 மணிக்கு தீபாராதனையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும், நள்ளிரவு 12.15 மணிக்கு சுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு ஊட்டுப்படைப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான புதன்கிழமை அன்று நண்பகல் 12.30 மணிக்கு தீபாராதனையும் தொடர்ந்து பூப்படைப்பு, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நற்பணி மன்ற தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில், செயலாளர் வேலு, பொருளாளர் சிவ லிங்கம், துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×