search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் தெய்வம்"

    • செங்கோட்டை அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 8 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
    • கொடைவிழாவை முன்னிட்டு கோவிலில் நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள மிகபிரசித்தி பெற்று விளங்கும் அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி திருக்கால் நாட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அப்பாமாடசாமிக்கு ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜை, அருள் பிரசாதங்களையும் மண்டகப்படிதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கொடைவிழா முன்னிட்டு 22-ந்தேதி இரவு குடியழைப்பு, குற்றாலம் தீர்த்தம் எடுத்தல் மற்றும் விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கொடை நாட்களில் மதியம் உச்சிகால பூஜையும், சாஸ்தா புறப்பாடு, சிறப்பு பூஜை மற்றும் மாலை மணிகண்டன், சரவணன் குழுவினரின் மகுடம் ஆட்டம், மாரியம்மாள் தங்கராஜ் வில்லிசையும் நடைபெற்றது. நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேமிசங்களை செலுத்தினர். செங்கோட்டை, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) மதியம் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

    ×