search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    • 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகில் உள்ள இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புனிதநீர் தீர்த்தம்

    25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் இரவு வில்லிசை நிகழ்ச்சியும், நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை வருஷா பிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் அன்று இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவிலை சுற்றி வந்து கும்மியடித்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும் தொடர்ந்து கரகாட்டம், நையாண்டி மேளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமக்கொடை, தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் வாண வேடிக்கையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கை, கரகாட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    இன்று மதிய கொடையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×