search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் கொடை விழா
    X

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் கொடை விழா

    • பூப்படைப்பு நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.
    • ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை சந்திப்பு அருகே அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா கடந்த 4-ந்தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. 10-ம்நாள் விழாவான கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு நிர்மால்ய தீபாராதனை, 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, நள்ளிரவு 12.15 மணிக்கு சுடலை மாடசாமிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு ஊட்டுப்படைப்பு ஆகியவை நடந்தது.

    நிறைவு நாளான நேற்று மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து நடைபெற்ற பூப்படைப்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மேயர் மகேஷின் மனைவி மேகலா மகேஷ், நாஞ்சில் முருகேசனின் மனைவி தங்க தேவிகா, 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா உள்பட ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பூப்படைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நற்பணி மன்ற தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் செயலாளர் வேலு, பொருளாளர் சிவலிங்கம், துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×