search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்கால கூட்டத்தொடர்"

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்பாக வளரும்.

    இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூண் மற்றொன்றின் வரம்புக்குள் ஊடுருவினால் அது ஆட்சி முறையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊடுருவல் அவ்வப்போது நடப்பதைப் பார்க்க முடிகிறது.

    மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தேசிய நீதி துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை உச்சநீதிமன்றத்தின் போக்கு கேள்விக்கு உள்ளாக்குகிறது.

    ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டபூர்வமாகப்பட்ட அரசமைப்பு பரிந்துரையை நீதித்துறை ரத்து செய்த இந்த சம்பவத்துக்கு நிகராக வேறு எந்த சம்பவமும் இல்லை.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த மசோதா உறக்கத்தில் உள்ளது. இது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
    • இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர். பொதுமக்கள் தரப்பிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
    • மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

    இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.

    இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

    இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
    • இதில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இதனால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் ராகுல் காந்தி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வர வாய்ப்புள்ளது. அத்துடன் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதா உள்பட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை மசோதா அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும், தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதிக்கவும் வழிவகை செய்யும். அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான கட்டமைப்பை உருவாக்க ஆர்பி.சி. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி கிரிப்டோகரன்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது இளைஞர்கள் அதிகப்படியான வாக்குறுதி மற்றும் வெளிப்படை தன்மையில்லாத விளம்பரம் ஆகியவற்றால் தவறாக வழிநடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பது ஆலோசனையில் முக்கியமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், ஆலோசனை கூட்டத்தில் பண மோசடி மற்றும் பயங்கரவாத செயலுக்கு பண உதவி செய்வதற்கும் ஒழுங்குமுறைப்படுத்தாக கரன்சி மார்க்கெட்டை அனுமதித்துவிடக்கூடாது என்றும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பிரதமர் மோடி கிரிப்டோகரன்சி குறித்து ஆர்.பி.ஐ., உள்துறை அமைச்சகம், நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
    ×