என் மலர்

  இந்தியா

  ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 14 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர்: மத்திய மந்திரி தகவல்
  X

  மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய்

  ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 14 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர்: மத்திய மந்திரி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
  • இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-

  ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர். பொதுமக்கள் தரப்பிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

  கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×