search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறை தீர்க்கும் கூட்டம்"

    • கிருஷ்ணகிரியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுதுதி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 31-ந் தேதி மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டு மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் உடனடியாக அவற்றின் மீது தீர்வு கண்டு உரிய ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்ல் நடைபெற உள்ளது.

    எனவே மின் வாரியத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுதுதி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளலாம். ஓய்வூதியர் மற்றும குடும்ப ஓய்வூதியர்களின் புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது. இதுவரை புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெறாதவர்கள், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் 31&ந் தேதி தங்களின் பி.பி.ஓ. நகலை காட்டி புதிய மருத்துவ அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் ஆவத்துவாடி, ஊத்தங்கரை ஒட்டம்பட்டி (புதூர்புங்கனை), போச்சம்பள்ளி சாலூர்(ரங்கம்பட்டி), பர்கூர் ஆம்பள்ளி, சூளகிரி அத்திமுகம், ஓசூர் பூனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை சென்னமாலம்(கக்கதாசம்), அஞ்செட்டி தாலுகா பிலிகுண்டு ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

    எனவே, இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கொடுத்து வருகின்றனர்.

    நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திருப்பூர் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர். அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 638 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுத்தினாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • நலத்திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிப்பதில்லை.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் மாதந்தோறும் வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மொரப்பூர் கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கையில் குறித்து மனுக்கள் கொடுக்கப்படும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்று ஆக்ரோஷமாக கேள்விகளை முன்வைத்தனர்.

    அரூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள அரசு அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை மேற் கொள்வதில்லை அதனால் விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும்

    தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்தாலும் நலத்திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிப்பதில்லை.

    அனைத்து துறை அலுவலர்களும் மெத்தனப் போக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டை எழுப்பினார்கள்

    குறிப்பாக வேளாண்மை துறையில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசனம் குறித்த பொருட்கள் தரமானதாக இல்லை என்றும் தக்காளி கூல் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை குறித்து எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை என்றும் மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரிவிப்பதில் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் அந்த திட்டத்தில் பயன் இல்லாமல் போவதாகவும்

    வேளாண்மை துறையின் மூலம் மானிய விலையில் கொடுக்கப்படும் வேளாண் இயந்திரக் கருவிகள் மற்றும் மின் மோட்டார்கள் குறித்து மனுக்கள் கொடுத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து அரசு அலுவலர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது

    பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத் திறனாளி களுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்து றையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பின்முனை வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணையையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிக்கான ஆணைக ளையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 79 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 274 மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொது மக்களிடம் கோரிக்கையில் 274 மனுக்கள் பெற்று உடனை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொது மக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் அப்துபோது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது, எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது.
    • அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×