search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தினம்"

    • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவின்போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்.
    • குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவின்போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு (2024) குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார். அதன்படி குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன் பங்கேற்கப்போவதில்லை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • மத்திய அரசு, ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது.
    • பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

    புதுடெல்லி :

    ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

    மாநிலங்களின் கலாசார பாரம்பரியத்தை விளக்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறுகின்றன. அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையின் பெயர், 'கடமைப்பாதை' என்று மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசு, ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது. சமீபத்தில், பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே இடம் பெற்ற சில குழுக்கள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் இடம்பெற்ற குழுவுக்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி உள்ளனர்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு கடமைப்பாதையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், முற்றிலும் பெண் குழுக்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பெண் குழுக்களை மட்டும் பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அணிவகுத்து செல்லும் குழுக்களிலும், பாண்டு வாத்திய குழுக்களிலும், அலங்கார ஊர்திகளிலும் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதர கலாசார நிகழ்ச்சிகளிலும் பெண்களே இடம் பெறுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுதொடர்பாக முப்படைகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ராணுவ அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    • மதுரை நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
    • 2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். தெற்குவாசல் நாடார் சங்கத்தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாடார் பள்ளிகள் செயலா ளர் குணசேகரன் வர வேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் அன்பரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவுரவ தலைவர்கள் ராஜன், முனிராஜன், பொருளாளர் என்.எல்.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப் பட்டது. தலைமை யாசிரியர் நாகநாதன் தொடக்கவுரை யாற்றினார்.

    நாடார் வித்யாபிவிருத்தி சங்க அறப்பணிக்குழு தலைவர் உத்தண்டன் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச் செயலாளர் அருஞ்சுனைராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திபாய் சுவாமி அடியார் நன்றி கூறினார்.

    2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    • வாடிப்பட்டி யூனியனில் குடியரசு தின கிராமசபை கூட்டம் நடந்தது.
    • வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லா டம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள் நடந்தன. கச்சைகட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். சிறப்புஅழைப்பாளர்களாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விராலிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் காளியம்மாள் தலைமையில் துணைத்தலைவர் மணிகண்டன், பற்றாளர் சரோஜா, ஊராட்சி செயலாளர் செந்தாமரை முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செம்மினிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் தெய்வதர்மர் தலைமையில் துணைத்தலைவர் பஞ்சு, பற்றாளர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்சரஸ்வதி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    குட்லாடம்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிமீனா தலைமையில் துணைத்தலைவர் கதிரவன், பற்றாளர் மலர்மன்னன், ஊராட்சிசெயலாளர் தனலட்சுமி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ராமயன்பட்டியில் ஊராட்சிமன்றதலைவர் குருமூர்த்தி தலைமையில் துணைத்தலைவர் ராஜலட்சுமி, பற்றாளர் கவிதா, ஊராட்சிசெயலாளர் மகாராஜன் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பூச்சம்பட்டியில் தலைவர் சாந்தி தலைமையில் துணைத் தலைவர் லதா, பற்றாளர் சங்கர், ஊரட்சிசெயலாளர் செல்வம்முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம நி ர்வாக அலுவலர்கள், வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் குடியரசு தின கொண்டாட்டப்பட்டது.
    • லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நடந்தது. துணைவேந்தர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளியின் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேசுவரி தலைமை தாங்கினார். தலைமை ஒருஙகிணைப்பாளர் சிவகாமி முத்துகருப்பன் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் வைரவசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி யேற்றினார். தாளாளர் சத்தியன் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் குமார் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார்.

    சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் அருண்குமார் முன்னிலை வகித்தார்.லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    காரைக்குடி முத்துப்பட்டினம் சரசுவதி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியை மீனா கொடியேற்றி பேசினார்.

    காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பொறியாளர் கோவிந்த ராஜ், துணை பொறியாளர் சீமா, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, கவுன் சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகா தார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. சார்பில் ரூ. 52 ஆயிரத்தை கல்வி, மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தேசிய கொடியை ஏற்றி கல்வி மற்றும் மருத்துவ உதவியாக ரூ. 52 ஆயிரம் வழங்கினார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் சாதிக் அலி என்பவருக்கு உயர் கல்வி உதவியாக ரூபாய் 12 ஆயிரம், மதுரை மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் மதுரையில வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணிற்கு ரூ. 10 ஆயிரம், கன்னியாகுமரி மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேருக்கு மருத்துவ உதவியாக ரூ. 10 ஆயிரம், ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க.மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாஹிர் பாபு, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுலைமான், வர்த்தக அணி காஜா சுகுபுதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சாகுல் ஹமீது, தென் மண்டல செயலாளர் அப்துல் வாஜித், சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான்,மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் தாஜுதீன், த.மு.மு.க நகர் செயலாளர் முகம்மது தமிம், ம.ம.க. நகர் செயலாளர் அப்பாஸ்,நகர் பொருளாளர் மைதீன் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    திருப்பூர்:

    74 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றினார்.பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் மாநகராட்சி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கலை குழுவினர், பள்ளி மாணவ மாணவிகள், நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் என 2250 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    விழாவில் குடியரசு தின சிறப்புரை ஆற்றிய மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் சுத்தம் ,சுகாதாரம், சுற்றுப்புற சூழல் நலம் காக்க திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகராட்சியின் வசதிகள், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,திருப்பூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றிடும் வகையில் நாம் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மக்களின் தேவைகளை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி யில் உள்ள பூங்காக்களை புனரமைப்பு செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறோம். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குடியரசு தின விழாவில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள், உதவி கமிஷனர்கள் ,அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு நடைபெற்றது

    சென்னை:

    சென்னை அடுத்த புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 74-வது குடியரசு தின விழா சென்னை வாழ் நாடார்கள் சங்க பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தங்க மலர் ஜெகநாத் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பள்ளி நிர்வாக அதிகாரி ஏ.என்.எஸ். கோவிந்தசாமி வரவேற்க சென்னைவாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு நடைபெற்றது

    விழாவில் சங்க துணை தலைவர்கள் எல்.தாமஸ் நாடார் கரூ. சி.சின்னதுரை நாடார், செயலாளர் கே.எம்.செல்லதுரை, எம்.மாணிக்கம், எஸ்.செல்லதுரை, எல்.சி.மனோகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.ஜேம்ஸ் நாடார், ஆர்.செல்வகுமார், எஸ்.எம்.ராஜாமணி, எம்.இந்துநாதன், வழக்கறிஞர் சீனிவாசன், புழல் வட்டார நாடார்கள் சங்க தலைவர் அம்பிகா சேகர், காந்திநகர் வட்டார நாடார்கள் சங்க தலைவர் மனோகரன், துணை தலைவர் எஸ்.முருகேசன், செயலாளர் த.தனசேகரன், நிர்வாக உறுப்பினர் ஆர்.விமல்ராஜ், செங்குன்றம் வட்டார இளைஞரணி நிர்வாகிகள் தலைவர் பால்ராஜ், செயலாளர் ராஜேஷ், பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி ஹெல்மா செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் புழலில் உள்ள ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரி செயலர் ஏ.என்.எஸ்.கோவிந்தசாமி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் தேசியக் கொடியை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்.

    • பாரதிய ஜனதா அலுவலகத்தில் தேசிய கொடியை சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.
    • சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    குடியரசு தினத்தையொட்டி சென்னையில் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். செல்லக்குமார் எம்.பி., சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், ரஞ்சன் குமார், அகரம் கோபி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா அலுவலகத்தில் தேசியக்கொடியை சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    த.மா.கா. அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கொடி ஏற்றினார். இதில் மாநில நிர்வாகிகள் சக்தி வடிவேல், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கோவிந்தசாமி, முனவர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் கட்சி தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மறைந்த தலைவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் எம்.வி.எம். ரமேஷ்குமார், பிரேம்சந்த், ஜி.சந்தானம், டி.உதய குமார், எம்.சுப்பிரமணியன், ராஜ் நாடார், தி.நகர் தொகுதி தலைவர் ஆர். பாலகுமார், சைதை காந்தி மதி, தி.நகர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பூச்சி எஸ்.முருகன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    உடன் மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ், வாரிய செயலாளர் சரவணமூர்த்தி, நிதி ஆலோசகர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் புகழேந்தி, கண்ணன், பன்னீர்செல்வம், பர்கத் பேகம் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. `கண்ணுக்கு காட்சி அறிவுக்கு மீட்சி' என்ற தலைப்பில் மாணவர்களின் கண்காட்சி நடந்தது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன் தீப்சிங்பேடி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் தனசேகரன், விசுவநாதன், சாந்தகுமாரி, ஜெயதாஸ், நரேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தெற்கு ரெயில்வே சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் பொது மேலாளர் ஆர்.என்.சிங் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையினர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசாரின் கராத்தே, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை கோட்ட மேலாளர் ஸ்ரீகணேஷ்வி, கே.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் பல்லவன் இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய டிரைவர்கள், கண்டக்டர் கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகள் வழங்கினார்.

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் செயலாளர் விவேகானந்தர் முதன்மை தேர்தல் அலுவலர் தனலட்சுமி, அதிகாரிகள் ஜெய்குமார், ராம கிருஷ்ணன், மைதிலி, அகஸ்ரீ மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில், தேசிய கொடி ஏற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர், ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி, நற்சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

    பின்னர், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் சாகசங்கள் செய்து காட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய - மாநில அரசு வக்கீ்ல்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை துறைமுகம் சார்பில் தண்டையார் பேட்டையில் நடந்த குடியரசு தினவிழாவில் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றினார்.

    மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் முதன்மை செயலாளர் சித்திக் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுணன், பிரசன்ன குமார், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆைணயத்தின் சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வடசென்னையில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
    • திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் உதவி ஆணையர் சங்கரன் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    திருவொற்றியூர்:

    வடசென்னையில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

    திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 74வது ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கவுன்சிலர் கே. பி. சொக்கலிங்கம் தலைமையில் திருவொற்றியூர் கே பி சங்கர் எம். எல்.ஏ. தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வி. இராமநாதன், எஸ்.டி. சங்கர் உதவி தலைமை ஆசிரியர் கே.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் உதவி ஆணையர் சங்கரன் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் நவீனப்படுத்தப்பட்ட இ- சேவை மையத்தை மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு திறந்து வைத்தார்.

    மணலி மண்டல அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கவிதை, கட்டுரை, கோலம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மண்டல குழு தலைவர் ஏ. வி.ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    அருகில் மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் கவுன்சிலர்கள் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி, தீர்த்தி ராஜேஷ்சேகர், ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூர் நீதிமன்றத்தில் தேசிய கொடியை நீதிபதி வசந்தகுமார் தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் மாஜிஸ்திரேட் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 17 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
    • விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மேலும் அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 17 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் சீப்பாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவர்கலால், வட்டாட்சியர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 74-வது குடியரசு தினவிழா தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது.
    • வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி போட்டோவிற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் மலர்தூவி வணங்கினார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் இன்று காலை 74-வது குடியரசு தினவிழா தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது. அலுவலக கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி போட்டோவிற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் மலர்தூவி வணங்கினார்கள்.

    பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் வரவேற்று, இனிப்புகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

    ×