search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- மேயர் தேசிய கொடி ஏற்றினார்
    X

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் உள்பட பலர் உள்ளனர். 

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- மேயர் தேசிய கொடி ஏற்றினார்

    • திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    திருப்பூர்:

    74 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றினார்.பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் மாநகராட்சி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கலை குழுவினர், பள்ளி மாணவ மாணவிகள், நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் என 2250 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    விழாவில் குடியரசு தின சிறப்புரை ஆற்றிய மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் சுத்தம் ,சுகாதாரம், சுற்றுப்புற சூழல் நலம் காக்க திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகராட்சியின் வசதிகள், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,திருப்பூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றிடும் வகையில் நாம் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மக்களின் தேவைகளை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி யில் உள்ள பூங்காக்களை புனரமைப்பு செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறோம். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குடியரசு தின விழாவில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள், உதவி கமிஷனர்கள் ,அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×