search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழப்பெரும்பள்ளம்"

    • நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா.
    • கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

    திருவெண்காடு:

    பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேது பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.

    கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

    • ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு கேதுவும் சென்றனர்.

    இதனையடுத்து ராகு-கேது பரிகாரத்தலங்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் நேற்று ராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இதையொட்டி ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு நேற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர். கேது பெயர்ச்சி நாளில் இருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    • நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
    • சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.

    எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.

    ×