என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahu-Ketu Transit"

    • ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை.
    • கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.

    சுபஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2025) சனிக்கிழமை மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்ரம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.


    ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை, பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன என்பதை அனுபவத்தில் உணரலாம்.

    இப்பொழுது நடைபெறும் இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவர். மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாட்டையும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்து செய்தால் சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம்.

    சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அப்பொழுது அதன் சார பலத்திற்கேற்ப உங்களுக்குரிய பலன்கள் வந்துசேரும்.

    கடகத்திற்கு அஷ்டமத்து ராகு, கும்பத்திற்கு ஜென்ம ராகு, மகரத்திற்கு அஷ்டமத்து கேது, சிம்மத்திற்கு ஜென்ம கேது என்பதால் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். மேற்கண்ட ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்துகொள்வது நல்லது.

    11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்குபெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பிறகு 8.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு உச்சம் பெற்று, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். தொட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். வருமானம் உயரும்.

    6.3.2026 அன்று சனிப்பெயர்ச்சியாகி மீனத்திற்கு செல்கிறார். இதன் விளைவாக மேஷத்திற்கு ஏழரைச் சனியும், சிம்மத்திற்கு அஷ்டமத்துச் சனியும் தொடங்குகிறது. விருச்சிகத்திற்கு அர்த்தாஷ்டமச் சனியும், கடகத்திற்கு அஷ்டமத்துச் சனியும் விலகுகிறது.

    இந்த கிரகப் பெயர்ச்சிகளை அடிப்படையாக வைத்து ராகு-கேதுக்களுக்குரிய பலன் எழுதப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள நாக தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம்.

    சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில், ராகு- கேதுக்கள் இருந்தால் திருமண வாழ்க்கை தடைப்படும். புத்திரப் பேறில் தாமதம் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய ஜாதகத்தில் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் ராகு-கேதுக்களின் நிலையறிந்து யோகபலம் பெற்ற நாளில், உங்கள் ஜாதகத்திற்கு அனுகூலம் தரும் சர்ப்ப தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அதன் மூலம் தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும்.

    ராகு சஞ்சரிக்கும் பாதசார விவரம்

    26.4.2025 முதல் 31.10.2025 வரை பூரட்டாதி நட்சத்திரக் காலில் ராகு (குரு சாரம்)

    1.11.2025 முதல் 9.7.2026 வரை சதயம் நட்சத்திரக் காலில் ராகு (சுய சாரம்)

    10.7.2026 முதல் 12.11.2026 வரை அவிட்டம் நட்சத்திரக் காலில் ராகு (செவ்வாய் சாரம்)

    கேது சஞ்சரிக்கும் பாதசார விவரம்

    26.4.2025 முதல் 27.6.2025 வரை உத்ரம் நட்சத்திரக் காலில் கேது (சூரிய சாரம்) 28.6.2025 முதல் 5.3.2026 வரை பூரம் நட்சத்திரக் காலில் கேது (சுக்ர சாரம்) 6.3.2026 முதல் 12.11.2026 வரை மகம் நட்சத்திரக் காலில் கேது (சுய சாரம்)

    • வருகிற 8-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி
    • ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற பரிகாரங்கள் செய்தால் நலமாக வாழலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நாளில் ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற சில வழிபாடுகளை செய்தால் நலமாக வாழலாம். ராகு -கேது அருளைப்பெற, நவக்கிரகங்களில் உள்ள ராகு- கேதுவுக்கு பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

    * சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும், அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாகதோஷம், கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் அகன்றிட ராகு-கேது பெயர்ச்சியின்போது இங்கு வந்து வழிபடலாம்.

    * காரைக்குடி செஞ்சை பகுதியில் பெரியநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சன்னிதியும் உண்டு. இங்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

    * பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் சவுந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி சன்னிதி உள்ளது. இங்கும் ராகு-கேது பெயர்ச்சி அன்று சீர்காழியில் சிரபுரம் பகுதியில் உள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவிலில் வழிபடலாம்.

    * திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    * செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது தலம் ஆகும். இங்கு வழிபடலாம்.

    * தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் பாதையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒரு தலமான தொலைவில் மங்கலம் சென்று வணங்கலாம்.

    * மன்னார்குடி அருகில் பாமினியில் ஆதிசேஷன் வழிபட்ட தலம் உள்ளது. இங்கு வழிபட உடனடி பலன் கிடைக்கும்.

    * மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலி தாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    * கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்யலாம்.

    * கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழை தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இது ராகு-கேது பரிகார தலம், பிரார்த்தனை தலமாகும்.

    * ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி - அதற்காக பயப்படத் தேவை இல்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு- கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.

    * சோளிங்கரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.

    * கொடுமுடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் உள்ள நாகேஸ்வரரை வழிபடலாம்.

    * காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம், காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மூலவரான மகாகாளேஸ்வரரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    * ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள வடிவுடையம்மன்-உடனுறை படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    * கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

    * சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    * நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்ச நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

    * விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் உள்ள நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

    • ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு கேதுவும் சென்றனர்.

    இதனையடுத்து ராகு-கேது பரிகாரத்தலங்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் நேற்று ராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இதையொட்டி ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு நேற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர். கேது பெயர்ச்சி நாளில் இருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    • நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா.
    • கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

    திருவெண்காடு:

    பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேது பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.

    கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

    • வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழா.
    • நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம்.

    புதுச்சேரி:

    வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    18 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியானது நேற்று மாலை 3.40 மணிக்கு நடந்தது. ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிவாலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி சமேத ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள ராகு- கேது தனி சன்னதியில் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. மதியம் 3.40 மணியளவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபம் ஏற்றியும், பரிகார பூஜை செய்தும் வழிபட்டனர். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.

    புதுவை பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராகு பகவான், கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.

    ×