search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் கால்வாய்"

    • கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலே இடிந்தது
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. 14-வது வார்டு வளையல் கார தெரு மேட்டு தெரு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டும் பணி சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் தடுப்புச் சுவர்கள் நேற்று மாலை சரிந்து விழுந்தது கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே கால்வாய் சேதம் அடைந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று சேதமடைந்த கால்வாய் தடுப்பு சுவரை அப்புறப்படுத்தி தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய்க் கட்டியதால் தான் அது சேதம் அடைந்தது என கூறி பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முதுகுளத்தூர் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ஷாஜஹான் தலைமையில் செயல் அலுவலர் மாலதி முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார். மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 7, 10, 12 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என கவுன்சிலர்கள் மோகன்தாஸ், சேகர், யுவப்பிரியா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். 11-வது வார்டு தேவர் நகரில் குளியல் தொட்டி கட்டித்தரக்கோரியும். கே.பி.எம். தியேட்டர் பகுதியில் குழாய் உடைந்துள்ளதால் புதிய பைப்லைன் அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர் சேகர் கோரிக்கை விடுத்தார். குமார் நன்றி கூறினார்.

    • ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஷிவந்தியம் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் சிமெண்டு சிலாப் மூலம் மூடி பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

    இதையடுத்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மற்றும் அதிகாரிகள் வடக்கு தெருபகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொக்லைன் எந்திரம் உதவியுடன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமெண்டு சிலாப்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

    • தியாகதுருகத்தில் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக ங்களில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கால்வாய் சந்தைமேடு செல்லும் பாலத்தில் தூர்ந்து போனது. இதனால் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவு நீர் கால்வாய் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.

    • அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
    • அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் அருணாச்சலம் பேசுகையில், "தன் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    மற்றொரு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தி பேசுகையில், "அனைத்து தெரு விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் பேசுகையில், "செட்டித்தெரு இருளர் காலனியில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், "அங்காளம்மன் கோவில் தெருவில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் திறந்தவெளி கால்வாய்களுக்கு கான்கிரீட் பலகைகளை கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோல்டு மணி பேசுகையில், "தன் வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் சுமலதா நரேஷ் பேசும்போது, "தன் வார்டில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    தி.மு.க. உறுப்பினர்கள் திரிபுரசுந்தரி, அபிராமி, இந்துமதி, கல்பனா பார்த்திபன், சமீமாரஹீம் ஆகியோர் பேசும்போது, "தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். இப்படி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைவில் நிறைவேற்றப்படும்

    இதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணை தலைவர் குமரவேல் பேசிய தாவது:-

    அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிதிநிலை சீரடைந்ததும் அரசிடம் கூடுதல் நிதி பெற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முடிவில் பங்கஜம் நன்றி கூறினார்.

    ×