search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரிந்தது"

    • வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.
    • 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை. இந்த அணை பகுதியில் கடந்த 2 நாட்களாக இருசக்கர வாகனம் கேட்பாரற்று அங்கேயே இருந்தது.

    இதனை அந்தியூர் பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை அடுத்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.

    அதில் கொங்காடை காலனி பகுதியைச் சேர்ந்த செல்வன் (26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வத்திடம் எதற்காக இந்த வண்டியை 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

    அதற்கு மலை பாதையில் வரும் பொழுது வாகனம் பழுதாகி விட்டது. அதனை எடுத்து சென்று சரி செய்ய வேண்டும். அதனால் அங்கேயே நிறுத்தி வந்து விட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

    இதனையடுத்து பர்கூர் போலீசார் அந்த வாகனத்தை மினி ஆட்டோவின் மூலம் ஏற்றி வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியில் கொண்டு சென்று இறக்கி வைத்து உள்ளார்கள். மேலும் வண்டியின் உரிமையாளரான செல்வத்திடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தார்கள்.

    இதனால் வரட்டு பள்ளம் அணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் யாருடையது என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன் உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளம் பாலம் அருகில் உள்ள நீரோடையில் கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் கிடப்பதாக பிரம்மதேசம் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார். அந்தியூர் போலீஸ்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    இறந்தது யார் எந்த ஊர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிர ப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் (48) கால்நடை வியாபாரி கடந்த 22-ந் தேதி வியாபாரத்திற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இவர் எப்பொழுதும் வியாபாரத்திற்கு சென்றால் 4, 5 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில்சமூக வலைதளங்களில் பதிவிட்ட அங்க அடையாளங்களை வைத்து இறந்தவர் தனது கணவர் என்பதை அவரது மனைவி பழனியம்மாள் உறுதி செய்தார்.

    இதனை அடுத்து போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன்உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த சீரங்கனுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    • வாலிபர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது.

    கடலூர்:

    சிதம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார். புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த வாலிபர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இவர் புவனகிரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை செய்வதும் தெரியவந்தது. இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக நடந்திருப்பது தெரியவந்தது. 

    • ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.

    ×