search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drowned Recognized"

    • சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன் உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளம் பாலம் அருகில் உள்ள நீரோடையில் கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் கிடப்பதாக பிரம்மதேசம் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார். அந்தியூர் போலீஸ்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    இறந்தது யார் எந்த ஊர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிர ப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் (48) கால்நடை வியாபாரி கடந்த 22-ந் தேதி வியாபாரத்திற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இவர் எப்பொழுதும் வியாபாரத்திற்கு சென்றால் 4, 5 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில்சமூக வலைதளங்களில் பதிவிட்ட அங்க அடையாளங்களை வைத்து இறந்தவர் தனது கணவர் என்பதை அவரது மனைவி பழனியம்மாள் உறுதி செய்தார்.

    இதனை அடுத்து போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன்உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த சீரங்கனுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    ×