search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The person"

    • வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.
    • 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை. இந்த அணை பகுதியில் கடந்த 2 நாட்களாக இருசக்கர வாகனம் கேட்பாரற்று அங்கேயே இருந்தது.

    இதனை அந்தியூர் பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை அடுத்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.

    அதில் கொங்காடை காலனி பகுதியைச் சேர்ந்த செல்வன் (26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வத்திடம் எதற்காக இந்த வண்டியை 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

    அதற்கு மலை பாதையில் வரும் பொழுது வாகனம் பழுதாகி விட்டது. அதனை எடுத்து சென்று சரி செய்ய வேண்டும். அதனால் அங்கேயே நிறுத்தி வந்து விட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

    இதனையடுத்து பர்கூர் போலீசார் அந்த வாகனத்தை மினி ஆட்டோவின் மூலம் ஏற்றி வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியில் கொண்டு சென்று இறக்கி வைத்து உள்ளார்கள். மேலும் வண்டியின் உரிமையாளரான செல்வத்திடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தார்கள்.

    இதனால் வரட்டு பள்ளம் அணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் யாருடையது என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    ஈரோடு, 

    மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா ராயர்பாளையம் சாலைக்காடு பகுதியில் வரப்பாளையம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த தம்பி (எ) கருப்புசாமி (39) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில், சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (60). டெய்லர். இவரது மனைவி நிர்மலா (52).

    இருவருக்கும் திருமணமாகி 35 வருடங்களாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.

    ராமசாமிக்கு கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைக்கு சென்ற ராஜ் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார்.
    • உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார்.

    உடல் நலம் பாதித்ததால் ராஜ் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார். அப்போது காயம் எதுவும் இல்லாததால் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் சென்னிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்குள்ள ஒரு பகுதியில் 25 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்ப ட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரேஷன் அரிசியை பதுக்கியது சென்னிமலை அடுத்த மேலப்பாளையம், ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என தெரிய வந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    கருங்கல்பாளையம் சங்க நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1,550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    ×