ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் சென்னிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்குள்ள ஒரு பகுதியில் 25 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்ப ட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரேஷன் அரிசியை பதுக்கியது சென்னிமலை அடுத்த மேலப்பாளையம், ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என தெரிய வந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கருங்கல்பாளையம் சங்க நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1,550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com