மது போதையில் மயங்கி விழுந்தவர் சாவு

சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் மயங்கி விழுந்தவர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com