புவனகிரி அருகே லாரி மோதி இறந்த நபர் அடையாளம் தெரிந்தது

வாலிபர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது.
புவனகிரி அருகே லாரி மோதி இறந்த நபர் அடையாளம் தெரிந்தது
Published on

கடலூர்:

சிதம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார். புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த வாலிபர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இவர் புவனகிரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை செய்வதும் தெரியவந்தது. இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக நடந்திருப்பது தெரியவந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com