search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய்"

    • கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை

    தமிழக எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தேசிய தலைவர் அஜீஸ் அப்துல் கான், மாநில தலைவர் ஆசாத், துணைத் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர் நல சட்டங்களை மாற்றி அமைத்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், மத்திய அரசு நூல் விலையை குறைத்து பின்னலாடை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், சாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    தமிழக அரசு தொழிலாளர் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை குறைக்க உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
    • கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும்.

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்த திட்டத்தினால் 13 கோடி சிறிய மற்றும் ஏழை விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இணைய பாதுகாப்பு, தரவுகள் சேமிப்பு வசதிகளுடன் இந்த கணினிமய திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    இந்நிலையில், முற்றிலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை நீக்குவது என பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து உற்பத்தியாளர்களுக்கு சந்தை சுதந்திரத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் அரசுக்கோ, அரசால் நியமிக்கப்படுவோருக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் கச்சா எண்ணெயை உள்நாட்டு சந்தையில் விற்க முடியும் என்றும் மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்திய அரசு அவசரகால கையிருப்பாக மூன்று இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கையிருப்பு வைத்துள்ளது.
    ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், பணமதிப்பு ஆகியவற்றை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதுடன் விலைவாசி ஏற்றம் அடைகிறது. இது பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, தங்கள் கையில் இருக்கும் இருப்புகளில் இருந்து குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் பேரல்களை வினியோகம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, ஐந்து மில்லியன் கச்சாய் எண்ணெய் பேரல்களை அவசர கால இருப்பில் இருந்து விடுவிக்க இருக்கிறது.

    இந்தியா அவசர கால கையிருப்பாக மூன்று இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் (5.33 மில்லியன் டன்) கையிருப்பு வைத்துள்ளது.

    ‘‘திரவ ஹைட்ரோகார்பன்களின் விலை நியாயமானதாகவும், பொறுப்பானதாகவும் சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா உறுதியாக நம்புகிறது’’ இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் செயற்கையாகவே தேவையை அதிகரித்து, விலையை உயர்த்துவது குறித்து இந்தியா தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறது. இது எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    இந்த அறிக்கை அதிகாரிப்பூர்வமாக தேதியிட்டு வெளியாகவில்லை. இருந்தாலும் இன்னும் 10 நாட்களுக்குள் கச்சா எண்ணெய் பேரல்களை பயன்பாட்டுக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முடிவை நீட்டித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் அளவு குறைந்துள்ளது.

    உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இட்தில் உள்ளது. சர்வதேச அளவில் தொடர் விலை ஏற்றத்தால் இந்தியா பாதிப்புள்ளாகியுள்ளது.
    தினம்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானியர்கள் தினறி வரும் நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்து 83.66 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. #FuelHike #PetrolPriceHike
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

    ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

    இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

    இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஈரான் உடனான உறவை துண்டிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு இணை மந்திரி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். #MansoonSession #VKSingh
    புதுடெல்லி:

    ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. 

    நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிடில் பல விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது.

    சவூதி, ஈராக் நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிகாவின் எச்சரிக்கை இந்தியா, சீனா என பல நாடுகளுக்கும் பொருந்தும் நிலையில், இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



    இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-

    ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

    என அவர் பேசினார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
    ×