search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை தலைமை விவகாரம்"

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு 50 முதல் 60 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக தெரிகிறது.
    • பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உண்டு.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பதவி தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    பொதுக்குழு நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றை தலைமைப் பதவியை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாரானார்.

    ஆனால் அதை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் முறியடித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த பொதுக்குழு வருகிற 11-ந்தேதி மீண்டும் கூடும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்க மறுத்தனர்.

    பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உண்டு. அவைத் தலைவருக்கு கிடையாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரத்தாகி விட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இப்போது ஒருங்கிணைப்பாளராக இல்லை என்று கூறிவிட்டனர்.

    இந்த சூழலில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் என்ற முறையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றியும் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிப்பது தொடர்பாகவும் ஆலோசித்தனர்.

    ஆனால் இந்த கூட்டம் செல்லாது என்றும் இதில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேரில் 2,432 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாக ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார். இதற்கான கடிதத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    இந்த சூழலில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையில் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு 50 முதல் 60 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக தெரிகிறது. இவர்களும் விரைவில் அணி மாறலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
    • அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கி உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக உள்ளார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் சசிகலாவும் அ.தி.மு.க. தலைமை பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த சசிகலா, அ.தி.மு.க. தலைமை பதவிக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் என கூறினார்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக தனது அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். கரூரில் இருந்து சசிகலா இந்த பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதலில் கரூருக்கு செல்லும் சசிகலா, அடுத்தடுத்த நாட்களில் சுற்றுப் பயணத்தை வேகப்படுத்தி ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் நிச்சயமாக இழுக்க முடியும் என்று சசிகலா நம்புவதாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி அணியினர் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
    • அ.தி.மு.க. சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டுள்ளோம்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்திருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன்படி நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பின் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று குற்றம் சாட்டினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் வலுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டு வரும் நிலையில் எனது ஒப்புதலின்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அளித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வில் சட்ட விதி மீறல்கள் தொடர்ந்து நடை பெற்றுள்ளன என்றும் தனது கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட நடவடிக்கைகள் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

    இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கத்துடன் பதில் அளிக்க உள்ளனர்.

    அ.தி.மு.க. சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டுள்ளோம். இதில் எந்த விதி மீறலும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களது பதில் கடிதத்தில் தெரிவிக்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வக்கீலும் சட்ட நிபுணர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் ஒருவர் கூறும் போது, அ.தி.மு.க.வை பொறுத்த வரை பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே கட்சியின் தலைமையை தீர்மானிக்கும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு உள்ளது. இதனை தேர்தல் ஆணையத்தில் நிரூபிப்போம் என்று கூறினார்.

    இன்னும் சில தினங்களில் இந்த பதில் கடிதம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீலான திருமாறன் கூறும் போது, அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இன்றி நடைபெறும் நிகழ்ச்சிகள் செல்லாது என்றும், இதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் வலுத்து வரும் நிலையில் வருகிற 11-ந்தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்கிற கேள்வியும் பூதாகரமா எழுந்துள்ளது.

    • ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை.
    • ஓ.பி.எஸ் க்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அறிவிக்க உள்ளோம், ஓ.பி.எஸ். மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள், ஓ.பி.எஸ். தவறான முடிவு எடுக்கும்போது சுட்டி காட்ட கடமைப்பட்டு உள்ளோம்,

    ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை. தனது சுயநலம் கருதி நேற்று உசிலம்பட்டி பயணத்தை மேற்கொண்டார். 3 முறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை, ஓ.பி.எஸ் க்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ். தவிர்த்து இருக்கலாம்.

    அ.தி.மு.க.வில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர், தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.

    தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்து விலகி செல்ல வேண்டும், பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ். தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார்.

    ஓ.பி.எஸ்.யை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா, ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எந்த சதி வளையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு ஓ.பி.எஸ்.சும் ஒரு காரணமே, தோல்வி ஏற்படும் என நினைத்து இருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.எஸ். தடுத்து நிறுத்தி இருக்கலாமே?

    தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. அ.தி.மு.க.வை நிர்வாகம் செய்ய ஓ.பி.எஸ்சுக்கு தகுதி, திறமை இல்லை. ஓ.பி.எஸ். மட்டும் தென் மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயதிற்கும் தலைவர் இல்லை. அவரை போல் பல தலைவர்கள் உருவாக தயாராக உள்ளனர்.

    ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தனது தொகுதி மேம்பாடு குறித்து முதல்வரை சந்தித்து அவலம். சட்டமன்றத்தில் பேசலாம். மனு கொடுத்தது ஏற்புடையது அல்ல. எடப்பாடி பழனிச்சாமி தான் அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர்.ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓ.பி.எஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
    • ஒற்றை தலைமைக்கு எதிரான கருத்துக்களை முறியடிப்பது குறித்து கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசினர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.

    அடுத்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும், அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று கூறி வருகிறார்கள். இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றார்.

    அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகத்தை முறியடிப்பது தொடர்பாக அவர் நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்காமல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது. வழக்கமாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பை தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டிருந்தார்.

    இதன்படி இன்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமியுடன் மேடையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். சுமார் 70 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதனை எதிர் கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் பொருளாளராக மட்டுமே உள்ளார் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரில் ஒருவரை கட்சியின் பொருளாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் நிர்வாக வசதிக்காக எடப்பாடி பழனிசாமியை தற்காலிகமாக தலைமை பொறுப்பில் அமர வைப்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும், ஒற்றை தலைமை தீர்மானம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.45 மணி வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியையும் பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜெயக்குமார் கூறும்போது, ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு தெரிய வரும் என்றார்.

    இதன் மூலம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்படுவது உறுதியாகி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எப்படியாவது தடை போட்டு விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பொருளாளர் பதவியையும் பறிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள புதிய வியூகம் அ.தி.மு.க.வில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து தனியாக ஆலோசனை நடத்தி இருப்பதும் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.
    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.

    சென்னை

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையொட்டி அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    பல்வேறு அணிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில் இடம் பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் படத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவு தொண்டர்கள் பிளேடால் கிழித்து எறிந்தனர். இதனால் தலைமை கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பை தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டிருந்தார்.
    • அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.

    அடுத்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும், அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, 11-ந்தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெறாது என்று கூறி வருகிறார்கள். இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றுள்ளார்.

    அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகத்தை முறியடிப்பது தொடர்பாக அவர் நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்காமல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது. வழக்கமாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பை தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டிருந்தார்.

    இதன்படி இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சுமார் 70 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதனை எதிர் கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டார்.

    இதனால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் பொருளாளராக மட்டுமே உள்ளார் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

    11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் நிர்வாக வசதிக்காக எடப்பாடி பழனிசாமியை தற்காலிகமாக தலைமை பொறுப்பில் அமர வைப்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எப்படியாவது தடை போட்டு விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பொருளாளர் பதவியையும் பறிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள புதிய வியூகம் அ.தி.மு.க.வில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக இன்று காலை அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்தும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை, செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து தனியாக ஆலோசனை நடத்தி இருப்பது அக்கட்சிக் குள் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

    ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள இந்த புதிய வியூகம் அ.தி.மு.க.வினர் மத்தியில் கூடுதல் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் நடத்த உள்ள கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • இதனால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பினார்.

    அதன்பிறகு மதுரை வந்த அவர் அங்கிருந்து வேன் மூலமாக தனது சொந்த மாவட்டமான தேனிக்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனைதொடர்ந்து ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு காளியம்மன் கோவிலிலும், தர்மசாஸ்தா கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது மகன் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அங்கு ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து தனது பண்ணை வீட்டில் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற வெளிமாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும் பா.ஜ.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பா.ஜ.க நிர்வாகி ஓ.பன்னீர்செல்வத்திற்கு காவிதுண்டு அணிவித்ததால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க மாநில ஊரகவளர்ச்சி பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் உள்பட ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரவேற்பு தெரிவித்தனர்.

    இன்று 2-வது நாளாக பண்ணைவீட்டில் ஆலோசனை மேற்கொண்டுவரும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை செல்ல முடிவு செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் நடத்த உள்ள கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • அ.தி.மு.க.வை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்த முடியாது.
    • ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஏற்பட்ட களேபரத்திற்கு பிறகு, மக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி அ.தி.மு.க.விற்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். இது தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்த முடியாது. கட்சி தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும். மேலும் ஜூலை 11 -ந் தேதி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்.

    அ.தி.மு.க. எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல. அனைவருக்கும் பொதுவான ஜனரஞ்சகமான கட்சி தான் அ.தி.மு.க., பொதுக்குழு நடக்கலாமா? இல்லையா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை நடத்தலாம் .

    ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம். ஆனால் கட்சியின் தொண்டர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஆதரவாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது.
    • ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் தயாராகி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பகிரங்கமாக வெடித்தது.

    அமைதியாக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க.வில் இந்த ஒற்றை தலைமை விவகாரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இடையே மேலும் பிரிவினையை உருவாக்கியது.

    இரட்டை தலைமை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்திய நிலையில் ஒற்றை தலைமையை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பிடிவாதமாக இருந்தனர்.

    இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமி பக்கமும் இன்னொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் இருந்து காய் நகர்த்தி வந்தனர்.

    பிரச்சினை பூதாகரமாக சென்றதால் கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பித்துரை உள்ளிட்டோர் இரு தரப்பிலும் மாறி மாறி சமரசம் பேசி பார்த்தனர். இதில் எந்த உடன்பாடும் ஏற்பட வழியில்லாமல் போனது.

    பொதுக்குழுவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று விட்டது.

    அன்றைய தினம் ஐகோர்ட்டில் விடிய விடிய நடைபெற்ற மேல்முறையீடு வழக்கில் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த சூழலில்தான் கடந்த 23-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வானகரத்தில் கூடியது. கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.

    அவர் மட்டுமின்றி துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமியும் மீண்டும் அதே அறிவிப்பை மறுபடியும் சொன்னார்.

    பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு மட்டுமே நடைபெற்றது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவித்தார்.

    இதனால் பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை. கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் ஆவேசப்பட்டார்.

    பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வருகிறது.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக, தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் கட்சியின் அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ரத்தாகி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், "திட்டமிட்டபடி ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் நிறை வேற்றப்படும்" என்று கூறி உள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறுகையில், "பொதுக்குழுவே நடக்காது" என்று கூறினார்.

    பொதுக்குழு தொடர்பாக இரு தரப்பினரும் சொற்போர் செய்து வருகின்றனர்.

    பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் அகற்றப்பட்டும், பேனர்களில் ஓ.பி.எஸ். படங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன. நாகை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது.

    அமைதியாக சென்ற அ.தி.மு.க. இப்போது இரு பிரிவாகி விட்டது.

    எடப்பாடி பழனிசாமிக்கு கே.பி.முனுசாமியும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வைத்திலிங்கமும் தூபம் போட்டு கட்சியை பிளவு படுத்தி விட்டதாக தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக அமர்ந்து பேசி இருந்தால், ஓ.பன்னீர்செல்வம் சமரசம் ஆகி விட்டு கொடுத்திருப்பார் என்றும் அதற்கு வழி இல்லாமல் உடன் இருப்பவர்கள் சமரசத்தை கெடுத்து விட்டனர் என்றும் குறை கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வழியாக பெரியகுளம் சென்றுள்ளார்.

    மீண்டும் சென்னைக்கு நாளை ஓ.பி.எஸ். வருகிறார். நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அன்று அமாவசை தினம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவரது அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் தயாராகி வருகின்றனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.வின் பொதுக்குழு மறுபடியும் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடைபெறுமா? அல்லது அதற்கும் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கி விடுவார்களோ? என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

    ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்ற பிரச்சினையில் இருவரும் கோர்ட்டுக்கு செல்லாமல் சுமூகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பது போக போக தெரிய வரும்.

    • பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார்.
    • வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள். அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ''ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவு பெறுவது நல்லது.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார். யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது.

    வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள். அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல். ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள்.

    அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுப்பது போல அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கொடுத்து கட்சியினரோடு ஒத்து போயிருக்கலாம். ஆனால் அவர் கோர்ட்டை நாடுகிறார். தேர்தல் ஆணையத்தை நாடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உளைச்சல் இல்லை. அவர் செய்யும் கலகங்களால் அ.தி.மு.க. தொண்டர்கள் தான் மன உளைச்சலில் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பா.ஜனதா தலையீடு இல்லை. 3-வது நபரின் தலையீட்டை அ.தி.மு.க.வும் ஏற்காது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க ஒருவன் பிறக்கவே மாட்டான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருப்பதால் அவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.

    அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் அவரை ஆதரித்து பேசினார்.

    சசிகலாவும் இதனை ஆமோதித்து இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு சசிகலாவுடன் கைகோர்க்கவும் ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் சிலருடன் அவர் ரகசியமாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பியதும் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தனது எதிர்காலம் குறித்தும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது பற்றியும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க.வில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் இந்த உள்கட்சி மோதலை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்து அந்த கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதையே பா.ஜனதா விரும்புகிறது. இதுவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் பா.ஜனதா கால் பதிக்க உதவும் என்றே அக்கட்சியினர் நம்புகின்றனர்.

    இதனை மனதில் வைத்து அந்த கட்சி ரகசியமாக சில நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ×