search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் தோல்விக்கு காரணமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து தானாக விலக வேண்டும்- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
    X

    ராஜன்செல்லப்பா எம்எல்ஏ



    தேர்தல் தோல்விக்கு காரணமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து தானாக விலக வேண்டும்- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

    • ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை.
    • ஓ.பி.எஸ் க்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அறிவிக்க உள்ளோம், ஓ.பி.எஸ். மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள், ஓ.பி.எஸ். தவறான முடிவு எடுக்கும்போது சுட்டி காட்ட கடமைப்பட்டு உள்ளோம்,

    ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை. தனது சுயநலம் கருதி நேற்று உசிலம்பட்டி பயணத்தை மேற்கொண்டார். 3 முறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை, ஓ.பி.எஸ் க்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ். தவிர்த்து இருக்கலாம்.

    அ.தி.மு.க.வில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர், தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.

    தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்து விலகி செல்ல வேண்டும், பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ். தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார்.

    ஓ.பி.எஸ்.யை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா, ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எந்த சதி வளையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு ஓ.பி.எஸ்.சும் ஒரு காரணமே, தோல்வி ஏற்படும் என நினைத்து இருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.எஸ். தடுத்து நிறுத்தி இருக்கலாமே?

    தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. அ.தி.மு.க.வை நிர்வாகம் செய்ய ஓ.பி.எஸ்சுக்கு தகுதி, திறமை இல்லை. ஓ.பி.எஸ். மட்டும் தென் மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயதிற்கும் தலைவர் இல்லை. அவரை போல் பல தலைவர்கள் உருவாக தயாராக உள்ளனர்.

    ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தனது தொகுதி மேம்பாடு குறித்து முதல்வரை சந்தித்து அவலம். சட்டமன்றத்தில் பேசலாம். மனு கொடுத்தது ஏற்புடையது அல்ல. எடப்பாடி பழனிச்சாமி தான் அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர்.ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓ.பி.எஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×