search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏமாற்றம்"

    • மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அப்பள சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக எந்த திட்டமும் இல்லை. தேசிய சாலை போக்குவரத்து திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். அதில் பரமக்குடி-ராமேசுவரம் சாலையை சேர்க்க வேண்டும். உழவன் நல நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.11.40 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

    ஒரே நாடு ஒரே வரி அதுவும் 5 சதவீத வரியே என்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை. தேசிய வணிகர்நல வாரியம் இன்று வரை செயல்முறைக்கு வரவில்லை. வணிகர்களுக்கான ஓய்வூதியம் அறிவிப்போடு நின்று விட்டது. தேசிய அளவில் வருவாய் ஈட்டித் தரும் அப்பள வணிகர்களின் வாழ்வாதாரம், குடும்ப நலனைக் காக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற–வும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • இதையடுத்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற–வும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு, சிமெண்ட் இருக்கை, மான், முயல், ஒட்டக்கச்சிவிங்கி போன்ற ஆளுயர சிமெண்ட் சிலைகள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாடக்கூடிய சீசா போன்றவையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில், ஏராளமானோர் வந்து, பொழுதை குதூகலமாக கழித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

    இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதாலும், காவிரில் தற்போது நீர்வரத்து குறைந்து இருப்பதாலும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பூங்கா திறக்கப்பட்டு இருக்கும் என ஆர்வமாக வந்த, சுற்றுலா பயணிகள் பூங்கா திறக்கபடாததால் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

    • வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் பெற்றுள்ளார்.
    • இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31). கடலூர் பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிருஷ்ணமூர்த்திடம் வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் என மொத்தம் 17 1/2 லட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆனால்இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெங்கடேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர்
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை அப்புறப்படுத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    மேலும் தினமும் மனு அளிப்பதற்கும் பொது மக்கள் வந்த வண்ணம் உள்ள னர்.அப்படி வருபவர்களில் சிலர் திடீரென தீக்குளிக்கும் சம்பவங்கள் நடந்து வருவதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலு வலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி னார்கள். இதில் அவர் கருங்கல் அருகே உள்ள பூடேற்றி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

    கூட்டுறவு துறையில் வேலை வாங்கித் தருவ தாக கூறி, சிலர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இது தொடர்பாக பல முறை முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்பட பல இடங்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை கேட்டு அலைந்து திரியும் தனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரமேஷ் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
    • மழை காரணமாக அவரால் விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கடம்பக்குடி பஞ்சாயத்தில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இருளர் இனத்தை சேர்ந்த 5 மாணவிகள்,4மாணவர்கள் உள்பட 9 பேர் பயின்று வருகின்றனர்.

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் இப்பள்ளிக்கென சத்துணவு சமைக்கும் பணியாளர் இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் அப்பள்ளியில் பயிலும் மனைவி ஒருவரின் தாயான தெய்வானை என்பவர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து இப்பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் தேவராஜம்மா என்பவர் கூறுகையில் , அப்பள்ளிக்கு முட்டை விநியோகிக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் மழை காரணமாக அவரால் விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி தங்கு தடையின்றி முட்டைகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    மேலும் இந்த பள்ளியில் தற்காலிகமாக சமையல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியருக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

    • காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு ஆற்றுக்கு செல்ல தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    • மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், முளைப்பாரி கொண்டு சென்று காவேரி ஆற்றில் விடுவதற்கும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை தடை விதித்துள்ளது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி 18 பண்டிகை அன்று பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடுவது வழக்கம். அதேபோல் புதுமணத் தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தாலி கயிறு பிறித்து கட்டுவதும், அங்கு சாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.

    அதே போல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த வர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து ஆயுதங்களை எடுத்து வந்து பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் கழுவி அங்கு பூஜை போட்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். பக்தர்களுக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    மாலை 5 மணிக்கு மேல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் படகு போட்டு நடைபெறுவது வழக்கம் .அதுவும் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சுமார் 6 ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, அரசம்பா–ளையம்,ஜேடர் பாளையம் தடுப்பணை, ஜேடர்பா–ளையம் பரிசல் துறை, வடகரை–யாத்தூர், கண்டிப்பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் மற்றும் பாலப்பட்டி வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் இன்று ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் காவிரி ஆற்றுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வழிபட்டனர்.

    மேலும் காவிரி ஆற்றுக்கு செல்ல தடை விதித்திருப்பது தெரியாத பலர் காவிரி ஆற்றுக்கு சென்றபோது அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் காவேரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

    காவிரி ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி,கலையரசன் தலைமையில், காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அந்தந்த பகுதிகளில் காவிரி ஆற்றின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இலவச கல்வி திட்டத்தில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • 2 கி.மீ. சுற்றளவில் உள்ள குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என்று விதி இருந்த போதிலும், கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக்பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி எல்.கே.ஜி.வகுப்பில் சேர்க்க 25 சதவீதம் ஏழை, எளிய குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் ஒதுக்கப்பட்டது.

    இது குறித்து அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 25-ந் தேதிவரை அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதி கமானோர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பித்த குழந்தைகளின் பட்டியலை மாவட்ட கல்வித்துறை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து பள்ளிகளில் பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள ஏராளமான குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அரசு அறிவித்த விதிகளின்படி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை.

    குறிப்பாக இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என்று விதி இருந்த போதிலும் அதை கல்வித்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அதே போல் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதில் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

    மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை கண்துடைப்பாக பார்த்துவிட்டு குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கின்றனர். குலுக்கல் தேர்வு முறையால் வசதிபடைத்த குழந்தைகளுக்கு இடம் கிடைத்துள்ளது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எதிர்வரும் ஆண்டுகளில் பள்ளி நிர்வாக கமிட்டி வழியாக தகுதியான குழந்தைகள் இந்தத் திட்டத்தில்சேர தமிழக கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×