search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம்
    X

    இலவச கல்வி திட்டம்.

    பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம்

    • இலவச கல்வி திட்டத்தில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • 2 கி.மீ. சுற்றளவில் உள்ள குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என்று விதி இருந்த போதிலும், கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக்பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி எல்.கே.ஜி.வகுப்பில் சேர்க்க 25 சதவீதம் ஏழை, எளிய குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் ஒதுக்கப்பட்டது.

    இது குறித்து அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 25-ந் தேதிவரை அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதி கமானோர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பித்த குழந்தைகளின் பட்டியலை மாவட்ட கல்வித்துறை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து பள்ளிகளில் பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள ஏராளமான குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அரசு அறிவித்த விதிகளின்படி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை.

    குறிப்பாக இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என்று விதி இருந்த போதிலும் அதை கல்வித்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அதே போல் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதில் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

    மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை கண்துடைப்பாக பார்த்துவிட்டு குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கின்றனர். குலுக்கல் தேர்வு முறையால் வசதிபடைத்த குழந்தைகளுக்கு இடம் கிடைத்துள்ளது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எதிர்வரும் ஆண்டுகளில் பள்ளி நிர்வாக கமிட்டி வழியாக தகுதியான குழந்தைகள் இந்தத் திட்டத்தில்சேர தமிழக கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×