search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் தகுதி தேர்வு"

    • பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    • உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

     சேலம்:

    தமிழகத்தில் காலியாக உள்ள பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தில் 316 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், எடை, உயரம் அளவு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.

    2-வது நாள்

    நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இன்று 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அனைத்து போட்டி களையும் காவல்துறை சார்பில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கண்காணிப்பு

    இந்த போட்டியினை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    தேர்வாளர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளையும் காவல்துறை சார்பில் மைதானத்தில் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதி தேர்வினை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது.
    • 2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பணியி டங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் இருந்து 417 பேர் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் ஏற்கனவே பணியில் உள்ள போலீசார் ஆவர். அனைவரும் சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உடல் தகுதி தேர்வை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் பார்வையிட்டனர். முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது. பின்னர் 1500 மீ ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை வரை உடல் தகுதி தேர்வு நடந்தது.

    2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது. இதில் நீளம், உயரம் தாண்டுதல் , கயிறு ஏறுதல் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் சோதனையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் வழங்கப்படும்.

    • பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.
    • இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    சேலம்:

    சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.

    311 பேர் தேர்வு

    இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியி டத்திற்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

    இதையொட்டி சேலம் ஆயுதப்படை மைதா னத்தில் காலை 7 மணிக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியயை நடைபெற்று வருகிறது. இதில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓட்டப்பந்தயத்தில் ஓடினர். பாதியில் நின்றவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    கூடுதல் பாதுகாப்பு

    நாளை (8-ந் தேதி) உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் உடல் தகுதி தேர்வு நடக்கும் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.

    • உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்தார்.
    • விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புலி–மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி–யன் மகன் விஜய் (வயது 27). சிவில் என்ஜினீயரிங் பட்ட–தாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு தகுதியான வேலையை தேடிக்கொண்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு நேர்முகத்தேர்வு–களையும் சந்தித்துள்ளார்.

    ஆனாலும் உரிய வேலை கிடைக்கவில்லை. இதற்கி–டையே அவர் தனது நண்பர் களின் ஆலோசனைப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பினார்.

    இதற் காக அவர் விண்ணப் பித்து இருந்தார். கடந்த சில மாதங்க–ளுக்கு முன்பு விஜய்க்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

    அதற்காக தகுந்த சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான உடல் தகுதி தேர்வினை தனியார் நிறுவனம் நடத்தி–யுள்ளது. இதில் அவர் தோல்வி அடைந்தார்.

    இத–னால் மிகுந்த மன விரக்திக்கு ஆளான விஜய் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெ–டுத்தார்.

    இதையடுத்து இன்று காலை வீட்டில் இருந்த அவர் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து–கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற் றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறித்துடித்தனர். இதுபற்றி அவர்கள் கீழவளவு போலீ–சாருக்கும் தகவல் தெரிவித்த–னர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மன்னவன், கீழவ–ளவு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீ–சார் தற்கொலை செய்து–கொண்ட விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    • தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடை பெற்றது.
    • பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.

    கோவை,

    தமிழ்நாடு தேர்வாணை யம் மூலம் 2-ம் நிலை போலீசார், ஜெயில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கு உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு 2-ம் நிலை போலீசார், ஜெயில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடை பெற்றது.

    இதில் பங்கேற்க மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது. பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் நடைபெற்றது.

    நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 185 பெண்கள் இன்று தேர்வில் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் சரிபார்த்தல் போன்ற தேர்வுகள் இன்று நடந்தது. பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தேர்வில் 316 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.தேர்வுகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×