search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்"

    • அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது.
    • ஆட்சியில் இருக்கிற நேரத்தில் மக்களுக்கு திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கி கொண்டே இருப்போம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் 35 நாட்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து 'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை விழா நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    மேலும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணிநியமன ஆணைகளை வழங்கியும் அதை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரையை பதிக்கக் கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம். அதிலே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக்கொண்டே போக முடியும்.

    இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிற திட்டங்களாக அமைந்திருக்கிறது. இந்த வரிசையில், இந்த திராவிட மாடல் அரசால், உருவாக்கப்பட்ட திட்டம்தான் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்.

    'மக்களிடம் செல் மக்களோடு வாழ். மக்களுக்காக வாழ்' என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்து விடமாட்டோம்.

    ஆட்சி இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். வாதாடுவோம். ஆட்சியில் இருக்கிற நேரத்தில் மக்களுக்கு திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கி கொண்டே இருப்போம்.

    அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதை முழுமையாக போக்கவேண்டும் என்பதற்காகதான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக 'மக்களுடன் முதல்வர்' என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18.12.2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

    அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம்.

    தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகளை முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

    முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.

    இது தொடர்பாக, மேலும் சில புள்ளிவிவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.

    மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.

    குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில்

    3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.

    கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை இலட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.

    இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன்.

    மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கி இருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு எழிலன், பரந்தாமன் எம்.எல்.ஏ. கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் புத்தகம் பரிசளித்து கவுரவித்தார். அனைவரையும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார்.

    முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
    • “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியிருப்பதாவது-

    தி.மு.க. பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற அந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கியமான கோரிக்கை களை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப வேண்டும் என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறப்பினர்களுக்கும் முதல மைச்சர் கடிதம் அனுப்பி னார்.

    இதனை தொடர்ந்து எனது திருமங்கலம் தொகுதி யில் நிறைவேற்றும் பணிக ளான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவ பணியை விரைந்து முடிக்க வேண்டும், கல்லுப்பட்டி பகுதியில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய டோராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர பணியை விரைந்து முடிக்க வேண்டும், திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட வேண்டும், கள்ளிக்குடி ஒன்றிய பகுதி யில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட கலெக்ட ருக்கு கடிதம் கொடுத்தேன்.

    இதை கொடுத்த பிறகு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை, இதிலே ஆயிரம் கோடி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறி வித்தார்கள். அப்படி பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது. இந்த அரசு வெறும் அறிவிப்பு வெளியி டுகிற அரசாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது.அதற்காக செயல் வடிவம் கொடுப்பதிலே இந்த அரசு தோல்வியடைந்துள்ளது.

    பல்வேறு துறைகளுக்கு 37 குழுக்கள் அமைக்கப் பட்டது. அந்த குழுக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அந்த 37 குழுக்க ளுடைய அறிவுரைகள் என்ன, செயல்பாடு என்ன?.எந்த தீர்வு கொடுத்திருக்கி றார்கள், என்பதை அரசு ஆலோசித்தது உண்டா?

    மேலும் 520 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என்று முதல மைச்சர் கூறி வருகிறார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இதன் அர சாணை விவரம் என்ன என்பதை கேட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எந்த விவரமு ம் வெளியிப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றுவதில் 100 சதவீதம் தி.மு.க. அரசு தோல்வி அடைந்திருக்கிறது.

    எடுத்த காரியங்கள் எல்லாம் அறிவிப்போடு நின்று விடுகிறது அதுதான் தி.மு.க. அரசின் அடையா ளம். ஆகவே ரூ.1000 கோடி யில் அறிவிக்கப்பட்ட "உங்கள் தொகுதியில் முதல மைச்சர்" என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×