search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பயிற்சி"

    • 10-ந் தேதி தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ள, இரண்டாம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்பட உள்ளது.

    மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப் பதாரர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம்.

    இந்த இலவச பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அலுவ லக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர்/பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in_வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

    இத்தேர்வில் ஆதிதிராவிடர் - பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி தனியார் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு,ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது 3முறைகளில் நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • இப்பதவிக்கான தேர்வு முறையானது ஆகிய மூன்று முறைகளில் நடைபெறவுள்ளது.
    • தகுதிக்கேற்ப ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்த ப்படுவார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தாட்கோ மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11 ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ளது.

    இந்த தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது ஆகிய மூன்று முறைகளில் நடைபெறவுள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்த ப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • கூன் வண்டு மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • தென்னை மரங்களைத் தாக்கும் கூன் வண்டின் சேதத்தின் அறிகுறிகள், கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் மையத்தின் (கே.வி.கே) தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 10-ந் தேதி காலை 10 மணிக்கு, தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் கூன் வண்டு மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இந்தப் பயிற்சியில், தென்னை மரங்களைத் தாக்கும் கூன் வண்டின் சேதத்தின் அறிகுறிகள், அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், அதாவது உழவியல் முறை, ராசயன முறை மற்றும் உயிரியியல் முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தருமபுரி,

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

    இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு/ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதிவக்கான தேர்வு முறையானது ஆகிய மூன்று முறைகளில் நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்பரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • மூன்று நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
    • விருப்பமுள்ள பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் நாளை (1ம் தேதி) முதல் 3 நாட்கள், நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த இலவச பயிற்சி நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய உதவி பேராசிரியர் சோமு.சுந்தரலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2021-22-ம் ஆண்டு நிதி உதவியின் கீழ், பாரூரில் அமைந்துள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்து நாளை (மார்ச் 1ம் தேதி) முதல் 3-ம் தேதி வரை மூன்று நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இதில் குளம் அமைத்தல், பராமரிப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

    மேலும், பயிற்சியாளர்கள் தற்போது வெற்றிகரமாக மீன் வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். எனவே, விருப்பமுள்ள பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு உதவி பேராசிரியர் சோமு.சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

    • 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயின்ற 41 தேர்வர்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயின்ற 41 தேர்வர்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி, சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 4-ந்தேதி காலை 7மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் முன்பதிவு செய்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகரில் மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 4500 பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி ஆகும். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் கடந்த 6-ந் தேதி முதல் நேரடியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
    • பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டி.என்.பி.எஸ்.சி., எஸ்எஸ்சி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கங் லோயர் டிவிசனல் கிளார்க், ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டெண்ட், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பதவிகளில் 4500 பணிக்காலியிடங்களுக்கு 6.12.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 04.1.2023.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8.12.2022 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறும்மாறும் கூடுதல்விவரங்களுக்கு 0421-2971152 மற்றும் 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    • குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 காலி பணியிடங்களுக்கான முதன்மை தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் புதன்கிழமை (நவ.30) முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடை பெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் சுயவிவரகுறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

    • மத்திய பணியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி நடந்தது.
    • இப்போட்டித் தோ்வுகளுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    மத்திய அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இளங்கலை பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்ற வா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன. அதில் சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.

    ×